திருப்பூர் குமரன் சாலையில் உள்ள ஸ்ரீ மகா கணபதி ஜுவல்லரியில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை..!

இந்த நகைக்கடை, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் சகோதரர் அன்பரசனின் உறவினர் கடை என்பது குறிப்பிடத்தக்கது.



திருப்பூர்: திருப்பூர் குமரன் சாலையில் உள்ள ஸ்ரீ மகா கணபதி ஜுவல்லரியில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக முன்னாள் அமைச்சரும், அதிமுக முக்கிய தலைவர்களில் ஒருவருமான எஸ்.பி.வேலுமணி வீட்டில் ஏழு மாத இடைவெளியில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.



மேலும், தமிழ்நாடு முழுவதும் கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட 58 இடங்களில் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமான இடங்கள், அலுவலகங்கள் மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்கள், கடைகள் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த 7 மாதங்களுக்கு முன்பாக முன்னாள் அமைச்சர் வீட்டில் சோதனை நடந்த நிலையில், மீண்டும் அவருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடப்பது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



இந்நிலையில், முன்னாள் அமைச்சர் வேலுமணியின் சகோதரர் அன்பரசனின் உறவினருக்கு சொந்தமான ஸ்ரீ மகா கணபதி ஜுவல்லரி திருப்பூர் குமரன் சாலையில் செயல்பட்டு வருகிறது. இன்று காலை 7 மணி முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அந்த கடையில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகாலை கடைக்கு வந்த 3 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை குழுவினர் கடைக்குள் சென்று கணக்கு விபரங்களை சோதனை செய்து வருகின்றனர். மேலும் கடை ஊழியர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...