வடவள்ளி அருகே இவரது இல்லத்தின் முன்பு அதிமுக தொண்டர்கள் சிலரும் வழக்கறிஞர்களும் திரண்டுள்ளதால், காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை: கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு நெருக்கமானவரான சந்திரசேகர் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இல்லம் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களிடம் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, இன்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இல்லம் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இல்லங்கள் என 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, கோவை வடவள்ளி பகுதியில் உள்ள எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவராக கருதப்படும் சந்திரசேகர் இல்லத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
எனவே, இவரது இல்லத்தின் முன்பு அதிமுக தொண்டர்கள் சிலரும் வழக்கறிஞர்களும் திரண்டுள்ளனர். இதனால் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவரது இல்லத்தில் ஏற்கனவே ஆகஸ்ட் மாதம் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.