ராசிபுரம் நகரில் நிலத்தை அளவீடு செய்யாத தாசில்தாருக்கு ரூ.12-ஆயிரம் அபராதம்

15-நாட்களுக்குள் சேகரின் நிலத்தை தாசில்தார் அளந்து கொடுக்க வேண்டும் மேலும் ரூ.10,000/- இழப்பீடாகவும், ரூ.2000/- வழக்கு செலவுத் தொகையாகவும் வழங்க வேண்டும் என்று மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


கோவை: நிலத்தை அளவீடு செய்யாத தாசில்தாருக்கு ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சேகர் என்பவர் தனது மனையை சர்வே செய்து தரும்படி கேட்டு ராசிபுரம் நகர் தாசில்தாரிடம் மனு அளித்தார். அதற்காகப் பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.100/- க்கு பணம் கட்டியிருந்தார். ஆனால் தாசில்தார் மனையை அளக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் சேகர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்தார். ஆனால் பயனில்லை. எனவே மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து, மனையை சர்வே செய்து தர உத்தரவிட வேண்டும் மற்றும் இழப்பீடாக ரூ.1 லட்சம் தர உத்தரவிட வேண்டும் என்று கோரினார்.

வழக்கில் ஆஜரான தாசில்தார், மனையை அளக்க இரண்டு பேர் ஆட்சேபனை தெரிவித்தால் அளக்கவில்லை என்று கூறினார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் "இந்த வழக்கைப் பார்க்கும் போது, தாசில்தார் பணியில் அலட்சியமாக இருப்பதும், சேவைக்குறைபாடு செய்திருப்பதும் நன்றாகத் தெரிய வருகிறது.

ஆகவே 15-நாட்களுக்குள் சேகரின் நிலத்தை தாசில்தார் அளந்து கொடுக்க வேண்டும் மேலும் ரூ.10,000/- இழப்பீடாகவும், ரூ.2000/- வழக்கு செலவுத் தொகையாகவும் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...