வடமாநில இளைஞர்களிடமிருந்த 70-கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
கோவை: கோவை சுல்தான்பேட்டை அருகே குடியிருப்பு அருகே உள்ள புதரில் பதுக்கி வைத்திருந்த 70-கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.
கோவையில் தங்கி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்குக் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக சூலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சூலூர் காவல் ஆய்வாளர் மாதையன் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது சுல்தான்பேட்டை அருகே சந்தேகத்திடமாக சிலர் சுற்றிவருவதாக போலீசாருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் சிலைக்கரைசல், லட்சுமி நகர் பகுதியில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்கிருந்த வடமாநில தொழிலாளர்கள் இருவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் முன்னுப்பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போது, அவர்கள் அங்குள்ள ஒரு குடியிருப்பு அருகே உள்ள முட்புதரில் கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, அங்கு ஆய்வு மேற்கொண்ட போது சுமார் 70-கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. முதல் கட்ட விசாரணையில் பிடிபட்ட நபர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சிபராம் மகரானா(40). மற்றும் சுதர்சன் புஹான் (41). என்பதும் இவர்கள் இருவரும் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பணியாற்றி வரும் வடமாநில தொழிலாளிகளுக்குக் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களிடமிருந்த 70-கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.