பி.ஆர்.நடராஜன் பக்குவமில்லாமல் பேசுகிறார்; கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி ஶ்ரீனிவாசன் கடும் தாக்கு..!

கோவை மக்களுக்கான கோரிக்கைகளைப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கண்டிப்பாக நிறைவேற்றி விடும் என்பது நடராஜனுக்குத் தெரியும். அந்த பதற்றத்தில் தான் நீண்ட அனுபவம் வாய்ந்த அவர், பக்குவமில்லாமல் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.


கோவை: கோவைக்காக எத்தனை ரயில்களை வாங்கிதந்திருக்கிறார்? என்று எம்பி பி.ஆர்.நடராஜனுக்கு கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி ஶ்ரீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து எம்.எல்.ஏ வானதி ஶ்ரீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

டெல்லியில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து, கோவை மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்திருந்தேன். இதனை இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியைச் சேர்ந்த கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினர் திரு. பி.ஆர்.நடராஜன் விமர்சனம் செய்திருக்கிறார்.

கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ரயில் நிலையங்கள் உள்ளிட்ட 79.55-கி.மீ. வரையிலான ரயில் பாதைகள் இன்னமும், பாலக்காடு கோட்டத்தில்தான் இருக்கின்றன. இதனை கோவை எம்.பி.க்கு நினைவூட்ட விரும்புகிறேன். இதனை மறைத்து விட்டு, ஒட்டுமொத்த கோவை மாவட்டமும், சேலம் கோட்டத்தில் இணைந்து விட்டது போன்ற தோற்றத்தை உருவாக்க அவர் முயற்சிக்கிறார்.

மக்கள் பிரச்சினைகளுக்காக, இதுவரை தனது லெட்டர் ஹெட்டை பயன்படுத்தாதவர், இப்போது எனக்காகப் பயன்படுத்தியிருக்கிறார். அதற்காக அவருக்கு நன்றி.

ரயில்வே கோட்டம் மட்டுமல்லாது, மேட்டுப்பாளையம், கோவையிலிருந்து திருச்செந்தூருக்கு ரயில், கோவையின் அருகில் உள்ள நகரங்களுக்குச் செல்ல பாசஞ்சர் ரயில், கோவை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சர்க்குலர் ரயில், வடகோவை ரயில் நிலையத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ரயில்வே அமைச்சரிடம் நான் வலியுறுத்தி இருக்கிறேன்.

ஒரு சட்டமன்ற உறுப்பினராக ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்து, கோரிக்கை விடுக்கும் போது மக்களவை உறுப்பினராகத் நடராஜன் இணைந்து பணியாற்றியிருக்க வேண்டும். அதற்கு மனமில்லாமல் எங்கே, நான் விடுத்த கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறி விடுமோ என்ற பதற்றத்தில், என் மீது விமர்சனங்களை வைத்திருக்கிறார்.

கோவை மக்களுக்கான கோரிக்கைகளைப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கண்டிப்பாக நிறைவேற்றி விடும் என்பது நடராஜனுக்குத் தெரியும். அந்த பதற்றத்தில் தான் நீண்ட அனுபவம் வாய்ந்த அவர், பக்குவமில்லாமல் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

கோவை எம்.பி.க்கு சில கேள்விகள்:-

2019-ல் நீங்கள் எம்.பி.யானது முதல், கோவை தொகுதிக்கு எத்தனை ரயில்களை கொண்டு வந்துள்ளீர்கள்?

கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் பலமுறை கோவை எம்.பி.யாக இருந்த போதும், 1956ல் பீளமேடு ரயில் நிலையத்திறகு பிறகு, ஏன் எந்த புதிய ரயில் நிலையத்தையும் கொண்டு வரவில்லை?

1956-ல் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பார்வதி கிருஷ்ணன் கோவை எம்.பி.யாக இருந்தபோது, கோவை கோட்டத்தை பாலக்காடு கோட்டதோடு இணைத்து, தமிழக வருமானத்தை இழந்தோம் என்பதை நினைவூட்டுகிறேன்.

போத்தனூர் -பொள்ளாச்சி அகல ரயில் பாதை திட்டத்தை விரைவுபடுத்த 2009-14ல் எம்.பி.யாக இருந்த நீங்கள் என்னென்ன நடவடிக்கைகள் எடுத்தீர்கள்?

கோவை ரயில்வே தொடர்பாக உங்கள் 8 வருட ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்றத்தில் எத்தனை கேள்விகள் எழுப்பியுள்ளீர்கள்?

கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்கு, நாடாளுமன்ற உறுப்பினரோடு இணைந்து பணியாற்ற நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். ஆனால், இதற்காக எந்த முன்னெடுப்பும் இல்லாமல், எந்தவொரு தொலைநோக்கு பார்வையும் இல்லாமல் எம்.எல்.ஏ.வை குறைகூறிக் கொண்டிருக்கிறார். இதனை அவர் மாற்றிக் கொண்டால் கோவைக்கு நல்லது.

இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...