மேளதாளங்களுடன் யாகசாலையில் வைக்கப்பட்ட தீர்த்தக் குடங்கள் கோபுரத்துக்குக் கொண்டு சென்று கலசத்திற்குத் திருக்குட புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சொலவம்பாளையம் பகுதியில் ஆயிரம் ஆண்டுகால பழமை வாய்ந்த ஸ்ரீ சாத்தூர் பெருமாள் திருக்கோவில் உள்ளது.
இந்த கோவிவில் 12-ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக விழா நேற்று மாலை கோ பூஜையுடன் தொடங்கப்பட்டுத் தொடர்ந்து மகா சுதர்சன ஹோமம், மகாலட்சுமி ஹோமம் நடைபெற்றது.
கோவிலின் முன்பு அமைக்கப்பட்ட யாகசாலையில் இரண்டு கால யாக பூஜை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழா இன்று அதிகாலை நடைபெற்றது.
மேளதாளங்களுடன் யாகசாலையில் வைக்கப்பட்ட தீர்த்தக் குடங்கள் கோபுரத்துக்குக் கொண்டு சென்று கலசத்திற்குத் திருக்குட புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இது தொடர்ந்து சாத்தூர் பெருமாளுக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டுச் சிறப்புப் பூஜை நடத்தப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் வழிபட்டனர்.