10-வது வார்டு அம்மன் நகரில் 80-ஆயிரம் ரூபாய் செலவில் பேருந்து நிழற்குடை

இந்த நிழற்குடை அமைக்கும் பணிக்காக 10-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கதிர்வேல் தனது சொந்தப் பணத்தைச் செலவு செய்தும், மேலும் சில இடங்களிலிருந்து நிதிகளைத் திரட்டியும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.



கோவை: கோவை மாநகராட்சியின் 10-வது வார்டில் தங்குதடையின்றி குடிநீர் கொண்டு செல்வதற்காக 1,50,000-ரூபாய் செலவில் பைப்லையன் அமைக்கப்பட்டுள்ளது. 80-ஆயிரம் ரூபாய் செலவில் பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டு வருகிறது என்று 10-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் கதிர்வேல் தெரிவித்தார்.

கோவை மாநகராட்சி 10-வது வார்டு அம்மன் நகரில் 80-ஆயிரம் ரூபாய் செலவில் பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 4-தினங்களுக்கு முன்பு தொடங்கிய இப்பணிக்கான மொத்த தொகை 80-ஆயிரமாக உள்ள நிலையில் கோவை மாநகராட்சி இடமிருந்து அனுமதி பெற்ற பின்னர் தொடங்கிய இப்பணியானது பொறுமையாக 10-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆன கதிர்வேல் தலைமையில் நடைபெற்று வருகிறது.

இந்த நிழற்குடை அமைக்கும் பணிக்காக 10-வது வார்டு மாமன்ற உறுப்பினர் தனது சொந்தப் பணத்தைச் செலவு செய்தும், மேலும் சில இடங்களிலிருந்து நிதிகளைத் திரட்டியும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இரண்டு மூன்று நாட்களில் இப்பணியானது முடிவு பெறும் என்றும் தெரிவித்தார். கோவை மாநகராட்சியின் மக்கள் பிரதான கோரிக்கையாக முன்வைப்பது சாலை வசதிகள் மற்றும் கோடைக் காலம் என்பதால் குடிநீர்த் தேவையை அதிகரித்துள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது பெரிய கவுண்டர் நகர் விஜயலட்சுமி நகர் பூந்தோட்டம் நகர் வெற்றி நகர்ப் பகுதிகளில் தங்குதடையின்றி குடிநீர் கொண்டு செல்வதற்காக 1,50,000-ரூபாய் செலவில் பைப்லையன் அமைக்கப்பட்டுள்ளது.

மேல்நிலைப்பள்ளி வேண்டும் என்று கேட்கும் இப்பகுதி மக்களுக்குக் கல்வி கிடைத்திடக் கல்வி அமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் தற்போது அதற்கான பணிகள் துவங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், கூடிய விரைவில் இப்பகுதியில் உள்ள சாக்கடைகள் அனைத்தையும் பாதாளச் சாக்கடை திட்டத்தின் கீழ் கொண்டுவர விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...