செல்போன் கோபுரம் அமையும் பட்சத்தில், அப்பகுதியில் பல்வேறு விளைவுகள் ஏற்படும் அபாயம் இருப்பதால் அனுமதி வழங்கக்கூடாது எனக்கூறி மனு.
திருப்பூர்: திருப்பூரில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருப்பூர் மாவட்டம் அமராவதிபாளையத்தில் உள்ள ஓம் நாராயண நகர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், அப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் தனியார் செல்போன் நிறுவனம் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அவை அமையும் பட்சத்தில், அப்பகுதியில் பல்வேறு விளைவுகள் ஏற்படும் அபாயம் இருப்பதால் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியைத் தடுத்து நிறுத்தி செல்போன் கோபுரம் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.