கோவை மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலைப் பணிகள் மற்றும் சுகாதார நல மையங்கள் கட்டும் பணிகளை மாநகராட்சி ஆணையர் நேரில் சென்று ஆய்வு..!

இந்த ஆய்வின்போது, தெற்கு மண்டல உதவி ஆணையர்‌ அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர்‌ கே.கருப்புசாமி, உதவிப் பொறியாளர்‌ கனகராஜ்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.


கோவை: கோவை மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலைப் பணிகள் மற்றும் சுகாதார நல மையம் கட்டும் பணிகளை மாநகராட்சி ஆணையர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌. 92க்குட்பட்ட பி.கே.புதூர்‌ பிரதான சாலை மற்றும்‌ முத்துசாமி சாலையில்‌ 1277 மீட்டர் தொலைவிற்கு ரூ.69.92 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ சாலைப் பணிகள்‌ நடைபெற்றுவருவதையும்‌, வார்டு எண்‌. 90க்குட்பட்ட கோவைப்புதூர் சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகம்‌ அருகில் 15வது நிதிக்குழு தேசிய சுகாதார பணி திட்டம்‌ 2021-2022ன்கீழ்‌, ரூ.25 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ நகர்ப்புற சுகாதார நல மையம்‌ கட்டும்‌ பணி நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., துணை மேயர்‌ ரா.வெற்றிசெல்வன்‌ ஆகியோர்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்‌.



அதனைத்‌ தொடர்ந்து, தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌. 92க்குட்பட்ட பாலக்காடு பிரதான சாலை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகம்‌ அருகில்‌ 15வது நிதிக்குழு தேசிய சுகாதார பணி திட்டம்‌ 2021-2022ன்கீழ்‌, ரூ.25 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ நகர்ப்புற சுகாதார நல மையம்‌ கட்டும்‌ பணியை மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌.

இந்த ஆய்வின்போது, தெற்கு மண்டல உதவி ஆணையர்‌ அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர்‌ கே.கருப்புசாமி, உதவிப் பொறியாளர்‌ கனகராஜ்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...