திருப்பூரில் அரசு பேருந்து ஓட்டுநரின் அலட்சியத்தால் பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கிக் கொண்ட இளைஞன் - அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைப்பு..!

கடந்த ஒரு மாத காலத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர்களின் அலட்சியத்தால், நீதிமன்ற ஊழியர், பனியன் தொழிலாளி என 5 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.



திருப்பூர்: திருப்பூரில் அரசு பேருந்து ஓட்டுநரின் அலட்சியத்தால் பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கிக் கொண்ட இளைஞன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் .

திருப்பூர் கோவில்வழி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி. இவர் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.



இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்காக பார்க் ரோடு சாலையில் வந்து கொண்டிருந்த போது அவரின் இடது புறமாக வந்த அரசு பேருந்து திடீரென்று வலது புறமாக (ஒரு வழிச்சாலையில் சென்றுள்ளது) இதில் பேருந்தின் பின் சக்கரத்தில் வாகனத்துடன் சிக்கிக்கொண்டார்.



இதையடுத்து, பொதுமக்கள் கூச்சலிட்டதைத் தொடர்ந்து அரசு பேருந்து நிறுத்தப்பட்டது. கார்த்தி சுதாரித்துக்கொண்டு லேசான காயத்துடன் உயிர் தப்பினார். காயம் அடைந்த கார்த்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.



இதனைத் தொடர்ந்து, பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கிக்கொண்ட இருசக்கர வாகனம் நீண்ட நேர போராட்டத்திற்குப் பின் பேருந்தின் அடியிலிருந்து எடுக்கப்பட்டது.



இந்த விபத்தின் காரணமாக பார்க் ரோடு சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கடந்த ஒரு மாத காலத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர்களின் அலட்சியத்தால், நீதிமன்ற ஊழியர், பனியன் தொழிலாளி என 5 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...