கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை - காதில் பூ சுத்திக்கொண்டு மனு அளிக்க வந்த ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர்..!

மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறைதீர்ப்பு நாளில் கொடுக்கப்படும் மனுக்கள் மீது எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை தெரிவிக்கும் வகையில் நூதன முறையில் மனு அளித்தனர்.



கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் காதில் பூ சுத்தி கொண்டும், மனுக்களை கழுத்தில் அணிந்தவாறும் நூதன முறையில் மனு அளிக்க வந்திருந்தனர்.



இது குறித்து ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் கூறுகையில்,

மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறைதீர்ப்பு நாளில் கொடுக்கப்படும் மனுக்கள் மீது எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதைத் தெரிவிக்கும் வகையில் காதில் பூ சுத்திக்கொண்டும், இதுவரைக்கும் அளித்த மனுக்களை மாலையாக அணிந்துகொண்டும் வந்ததாக தெரிவித்தனர்.

மேலும், மாநில அரசு பல்வேறு நலத்திட்டங்களை சீராக அமல்படுத்தி நடத்தி வருகிறது என கூறிய அவர்கள் சில அரசு அலுவலர்கள் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் மனுக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுப்பதுமில்லை எனவும் மக்கள் அளிக்கும் மனுக்களுக்கு எந்தவிதமான பதிலும் தருவதில்லை என குற்றம் சாட்டினர்.

பொது மக்களின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.



Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...