கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் குடிபோதையில் தகராறு செய்த மகனை குத்தி கொன்ற தந்தை - காவல் நிலையத்தில் சரண்..!

மேலும், தனிப்பிரிவு விசாரணையில் இறந்து போன ஷாஜகான் பேரில் கோவை மாநகர காவல் நிலையத்தில் குண்டாஸ் சட்டம் உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளது தெரியவந்துள்ளது.



கோவை: கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் குடிபோதையில் தகராறு செய்த மகனை குத்தி கொன்ற தந்தை காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி பூங்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் முகமதுரபீக் (50). இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் குடியிருந்து வருகிறார்.

இந்நிலையில், இன்று அதிகாலை 1 மணிக்கு வீட்டிற்கு வந்த முகமது ரபீக்கின் மகன் ஷாஜகான் (22) தனது தாயாரிடம் மது அருந்த பணம் கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த முகமது ரபீக்குடிபோதையில் இருந்த தனது மகன் ஷாஜகானை ஏன் இப்படி அடிக்கடி குடித்துவிட்டு வந்து தகராறு செய்கிறாய் என்று கேட்டுள்ளார்.

இதனையடுத்து, இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு முகமது ரபிக் வீட்டில் இருந்த காய் நறுக்கும் கத்தியை எடுத்து தனது மகன் ஷாஜகானின் இடது பக்க வயிற்றில் குத்தியும், முதுகின் பின்புறம் இரண்டு இடங்களில் கத்தியால் கீரியதில் கீழே விழுந்த ஷாஜகான் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

இதையடுத்து, முகமது ரபீக் தனது மனைவி உமேராவுடன் துடியலூர் காவல் நிலையம் வந்து சொன்னதின் பேரில் துடியலூர் உதவி ஆய்வாளர் ஜெகநாதன் மற்றும் துடியலூர் ஆய்வாளர் ஞானசேகரன் ஆகியோர் சம்பவ இடம் வந்து விசாரணை செய்து ஷாஜகான் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், தனிப்பிரிவு விசாரணையில் இறந்துபோன ஷாஜகான் என்பவருக்கு கோவை மாநகர காவல் நிலையத்தில் குண்டாஸ் சட்டம் உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளது தெரியவந்தது. அதிகாலையில் தந்தை மகனை குத்தி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...