கோவை வனப்பகுதியில் ஏற்படும் தீ விபத்துக்களைக் கண்காணிக்க 14 குழுக்கள் அமைப்பு..!

கோவை மாவட்டத்தில் உள்ள ஏழு வனச்சரகத்தில், ஒரு வனச்சரகத்திற்கு இரண்டு குழுக்கள் வீதம் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


கோவை: கோவை வனப்பகுதியில் ஏற்படும் தீ விபத்துக்களைக் கண்காணிக்க 14 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.



கோடைக் காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் வனப்பகுதிகளில் காட்டுத்தீ விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு மருதமலை வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து நான்கு மணி நேரத்திற்கு மேலாக போராடி வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அதேபோல், நேற்று இரவு போலுவம்பட்டி வனச்சரகத்தில் கேரளா செல்லும் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதுள்ளது. இதையடுத்து, சுமார் 2 மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது.

இது குறித்து மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் கூறும் போது:-

கோடைக் காலம் துவங்கிய உடன், கோவை மாவட்டத்தில் உள்ள ஏழு வனச்சரகத்தில் 14 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு வனச்சரகத்தில் இரண்டு குழுக்கள் வீதம் போடப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் குழுக்கள் வனப்பகுதிக்குள் சென்று தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.



மேலும், வனப்பகுதியில் மூன்று மீட்டர் அகலத்திற்கு “ஃபையர் லைன்” போடப்படுகிறது. இதன்மூலம் காட்டுத்தீ பரவினாலும் இந்த லைன் அருகே வரும்போது மேலும் பரவாமல் கட்டுப்படுத்தப்படுகிறது.

இதேபோல், வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் துண்டு பிரசுரங்கள் வழங்கியும், காட்டுத்தீ குறித்தும் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறோம் என தெரிவித்தார். அதே போல வன எல்லையோர பகுதிகளில் தண்ணீர் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளது. கோடைக் காலத்தில் வன விலங்குகள் தண்ணீர் குடிக்க இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இதே போல, பொள்ளாச்சி வனக் கோட்டத்தில் மட்டும் 56 ஆயிரம் ஹக்டார் வனப்பகுதியாக உள்ளது. இந்தக் கோட்டத்தில் 64 தற்காலிக தீ கண்காணிப்பாளர்கள் மற்றும் 69 வேட்டை தடுப்பு காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொள்ளாச்சி கோட்டத்தில் கடந்த 2015 முதல் தற்போது வரை 17 காட்டுத்தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மத்திய வன அமைச்சகம் காட்டுத்தீ போன்ற விபத்துகளை தீவிரமாக கண்காணித்து வருகிறது. குறிப்பாக இஸ்ரோ செயற்கைக் கோள் மூலம் கண்காணித்து வருகின்றனர்.



அதேபோல், வனத்துறையினரின் செல்போன் எண்களும் அங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தீ விபத்து ஏற்படும்போது, எங்களுக்கு தகவல் அனுப்பப்படுகிறது. உடனடியாக அங்கு பணியிலிருக்கும் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு உடனடியாக தீயணைப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவித்தார்.

இதே போல், அடர் வனப்பகுதியில் தீ விபத்து ஏற்படும்போது உடனடியாக அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுவதுடன் யாரேனும் பாதிக்கப்பட்டால் அவர்களை உடனடியாக வெளியே அழைத்து வரும் வகையில் ராணுவத்தில் பயன்படுத்தும் வாகனத்தை வாங்க வனத்துறை திட்டமிட்டுள்ளனர். அதிக உந்து திறன் மற்றும் சிறிய அளவில் இருக்கும் இந்த வாகனம் எளிதில் உள்ளே சென்று வெளியே வரும் எனவும் முன்னதாக 2 வாகனங்களை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...