கோவை மதுக்கரை அருகே தூக்கில் தொங்கிய நிலையில் அடையாளம் தெரியாத முதியவர் சடலமாக மீட்பு..!

மேலும், அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை மதுக்கரை அருகே தூக்கில் தொங்கியவாறு அடையாளம் தெரியாத முதியவர் உடலை சடலமாக மீட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மதுக்கரை சூட்டிங் ரேஞ் சாலை அருகே உள்ள மரத்தில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் தூக்கில் தொங்கியவாறு சடலமாக கிடப்பதாக மதுக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், நிகழ்விடத்தில் ஏதேனும் தடையங்கள் உள்ளதா என சோதனை செய்தனர். இறந்தவர் யார் ? எங்கிருந்து வந்தார் என்ற விபரங்கள் கிடைக்காத நிலையில், முதியவரின் புகைப்படத்தை அனைத்து காவல் நிலையத்திற்கும் அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலையா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...