கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

கை, கால்கள் மற்றும் முதுகு பகுதியில் பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தொழிலாளி நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலு. இவர் தென்னை மரம் ஏறும் தொழில் செய்து வந்தார்.

இந்நிலையில், பாலு கடந்த 4ம் தேதி பெரியநாயக்கன்பாளையம் சண்முக வேலாயுதம் தோட்டத்தில் தேங்காய் பறிக்கும் பணிக்காக சென்றுள்ளார். அப்போது ஒரு மரத்தில் ஏறி தேங்காய் போட்ட போது, திடீரென தவறி விழுந்து படுகாயமடைந்தார்.

இதையடுத்து, அங்கிருந்த சக ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கை, கால்கள் மற்றும் முதுகு பகுதியில் பலத்த காயத்துடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலு நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக அவரது மகன் பிரகாஷ் கொடுத்த புகார் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...