அகில இந்திய பொது வேலைநிறுத்தம் தொடர்பாக கோவை ஏஐடியுசி அலுவலகத்தில் கோரிக்கைகள் விளக்க மண்டல மாநாடு

தொழிலாளர்கள் நலனைக் காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில், அகில இந்திய அளவில் பொது வேலை நிறுத்தம் மார்ச் 28, 29 தேதிகளில் நடக்கிறது.


கோவை: அகில இந்திய பொது வேலைநிறுத்தம் தொடர்பாகக் கோவை ஏஐடியுசி அலுவலகத்தில் கோரிக்கைகள் விளக்க மண்டல மாநாடு நடைப்பெற்றது.

இதுகுறித்த வேலைநிறுத்த தயாரிப்பு மற்றும் கோரிக்கைகள் விளக்க மண்டல மாநாடு கோவை ஏஐடியுசி அலுவலகத்தில் இன்று நடந்தது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எல்.பி.எப்., தொழிற்சங்கம் சார்பில் வெ.கிருஷ்ணசாமி, ஜி.முருகேசன், கா.பிரபாகரன், ஆனந்தன், ரங்கசாமி, ஆர்.சுந்தரமூர்த்தி, எஸ்.தமிழரசி, நாமக்கல் சே.கோபால், செ.தங்கமுத்து உள்ளிட்ட மத்திய மாநில பொதுத்துறை ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கோவை மண்டல நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் நான்கையும் மத்திய அரசு கைவிட வேண்டும், மின்சார திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கக் கூடாது. கட்டுமான, உடலுழைப்பு தொழிலாளர்கள் அனைவருக்கும் விரிவான பாதுகாப்பு திட்டங்கள் அமல்படுத்தவேண்டும். ஏற்கனவே இயங்கி வரும் வாரியங்களைச் சீர்குலைக்கக் கூடாது.

ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தொழிலாளர்களைப் பணி நிரந்தர படுத்த வேண்டும். அதுவரை சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சிறு, குறு, நடுத்தர தொழில்களை, தொழிலாளர்களைப் பாதுகாக்க வேண்டும்.

தொழில்துறைக்குத் தேவையான மூலப்பொருட்களின் வரலாறு காணாத விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பங்கேற்பாளர்களுக்கு விளக்கப்பட்டது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...