'பா.ஜ.க -ஆர்.எஸ்.எஸ் இந்துக்களுக்கு எதிரானது'- உடுமலை சங்கர் நினைவேந்தலில் தொல் திருமாவளவன் உரை

ஆ.எஸ்.எஸ், பா.ஜ.க இந்துக்களுக்கு எதிரானதென்றும், ஆணவ படுகொலைகளுக்குத் தனிச் சட்டம் இயற்ற வேண்டும் எனவும் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.


கோவை: பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் இந்துக்களுக்கு எதிரானது" என்று உடுமலை சங்கர் நினைவேந்தலில் தொல் திருமாவளவன் உரையாற்றினார்.

தமிழ்நாட்டில் கொடூர கொலைகளில் ஒன்றாக உடுமலை சங்கர் படுகொலை கருதப்படுகிறது. பட்டியல் சமுதாய இளைஞரான சங்கர், ஆதிக்க சாதியினரான கௌசல்யாவைத் திருமணம் செய்த நிலையில் கௌசல்யா வீட்டாரால் பட்ட பகலிலே வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இதில் உயிரிழந்த சங்கரின் ஆறாம் ஆண்டு நினைவு நாளில் கௌசல்யா சங்கர் சமூக நீதி அறக்கட்டளையின் சார்பாக நினைவேந்தல் நிகழ்வு வடகோவை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்றார். இதில் உரையாற்றிய அவர் பட்டியல் சமுதாயத்தின் இளைஞர்களை பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக பெண்கள் இருமனது ஒத்துப்போகத் திருமணம் செய்து கொள்கின்ற நிலையில் அதனை உயர் சாதி சங்கங்கள் பிரித்து வைக்க முனைவதாகத் தெரிவித்தார்.

நாடகக் காதலென்றும் டீ சர்ட் கூளிங் கிளாஸ் அணிந்து தலித் சமுதாய இளைஞர்களைப் பெண்களை மயக்குவது தெரிவித்து பெண்களை இழிவுபடுத்துகின்றனர் என்றும் தெரிவித்தார். ஆஎஸ்எஸ் மற்றும் பாஜக முஸ்லீம், கிறிஸ்துவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை முன்னெடுப்பதனை அடிப்படையாக வைத்து ராமதாஸ் தலித்துகளுக்குப் பட்டியல் சமுதாயத்தினருக்கு எதிரான அரசியலை முன்னெடுப்பதாகத் தெரிவித்திருக்கின்றார்.

தலித் அல்லாத சமுதா கூட்டமைப்பினை தேர்தல் காலத்தில் ஆரம்பித்தவர் ராமதாஸ் என்றும் சாதியை வைத்து அரசியலில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் அரசியல் அதிகாரத்தில் பாஜவினர் உயர் பொறுப்பில் அமர்ந்தாலும், சனாதன கொள்கை அமைப்புகளில் மோடியோ அமித்ஷாவோ ஆஎஸ்எஸ் அமைப்பின் தலைவராகப் பொறுப்பேற்க முடியாதென்றும், ஆஎஸ்எஸ், பாஜக இந்துக்களுக்கு எதிரானதென்றும் கூறினார். ஆணவ படுகொலைகளுக்குத் தனிச் சட்டம் இயற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் திவிக கொளத்தூர் மணி, தபெதிக கு ராமகிருஷ்ணன் பங்கேற்று நினைவேந்தலில் சாதிய வன்மத்தினை ஒழிக்க வேண்டுமெனத் தெரிவித்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...