கருமத்தம்பட்டி நகர்மன்ற தலைவர் மற்றும் துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்து காங்கிரசுக்கு வழங்க வேண்டும்-வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.எம்.சி மனோகரன்

கருமத்தம்பட்டி நகராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளை தற்போது வெற்றி பெற்றவர்கள் ராஜினாமா செய்து காங்கிரசுக்கு வழங்க வேண்டும் எனவும் இதற்குத் தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.


கோவை: கோவை கருமத்தம்பட்டி நகர்மன்ற தலைவர் பதவியை பறித்த திமுகவைச் சேர்ந்த மனோகரன் ராஜினாமா செய்ய வேண்டும் என கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் வி.எம்.சி மனோகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

கோவை கருமத்தம்பட்டி நகர்மன்றத் தலைவர் பதவி திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. அந்நிலையில் திமுகவை சேர்ந்த மனோகரன் என்பவர் போட்டியிட்டு கருமத்தம்பட்டி நகர்மன்றத் தலைவராக அறிவிக்கப்பட்டார்.

திமுக கட்சித் தலைமை, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பதவிகளைப் பறித்த திமுகவினரை உடனடியாக பதவி விலக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில் கோவை கருமத்தம்பட்டி நகர்மன்ற தலைவர் பதவியை பறித்த திமுகவைச் சேர்ந்த மனோகரனை ராஜினாமா செய்ய வேண்டுமெனக் கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் வி.எம்.சி மனோகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.



இதுகுறித்தான செய்தியாளர் சந்திப்பு காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் வி.எம்.சி மனோகரன், நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தமிழக அரசின் மக்கள் நல திட்டங்கள் முதல்வரின் திறமையான செயல்பாடு ஆகியவற்றின் மூலம் திமுக கூட்டணி மிக சிறந்த வெற்றி பெற்றுள்ளதாகத் தெரிவித்தார். அமைச்சர் செந்தில்பாலாஜியின் திறமையால் அதிமுக கோட்டையில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதாகவும் கூறினார்.

இந்நிலையில் கருமத்தம்பட்டி நகராட்சி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், பி.பாலசுப்பிரமணியத்தை தலைவராக அறிவித்திருந்த நிலையில் கடைசி ஐந்து நிமிடத்தில் திமுக தனது வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.

கூட்டணிக் கட்சிகளுக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற திமுக தலைவரின் அறிவிப்பு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியது என்றும் தலைவர் தேர்தலைத் தொடர்ந்து துணைத் தலைவர் தேர்தலிலும் அதிமுக அணியுடன் சேர்ந்து சுயேச்சை உறுப்பினர் யுவராஜை வெற்றி பெற செய்தது மிக பெரிய வருத்தத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது என்றும் கூறினார்.



ஆனால் யுவராஜ் காங்கிரஸ் கட்சியின் சார்பிலேயே அந்த துணை தலைவர் பதவியைப் பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ள நிலையில் இதனை காங்கிரஸ் மற்றும் திமுக தலைமையிடம் கொண்டு சென்றுள்ளோம் என்றும் அவர் காங்கிரஸ் கட்சியில் சீட்டு கேட்கவும் இல்லை உறுப்பினராகவும் இல்லை எனவும் தெரிவித்தார். எனவே காங்கிரஸ் கட்சியின் பெயரில் துணைத் தலைவர் பதவியைப் பெற்றுள்ள யுவராஜ் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

நகராட்சி தலைவர் தேர்வின் போது திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் சேனாதிபதி திமுக வார்டு உறுப்பினர்களிடம் தலைவர் பதவிக்கு திமுக வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு பேசும் ஆடியோ இருப்பதாகவும் அதேபோன்று சுயேச்சை வேட்பாளர் யுவராஜ் காங்கிரஸ் நிர்வாகி ஒருவரிடம் அவசரமாகக் காங்கிரஸ் கட்சி அடையாள அட்டையைக் கேட்கும் ஆடியோ இருப்பதாகவும் கூறி அந்த ஆடியோவையும் வெளியிட்டுள்ளார்.

உடனடியாக கருமத்தம்பட்டி நகராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளை தற்போது வெற்றி பெற்றவர்கள் ராஜினாமா செய்து காங்கிரசுக்கு வழங்க வேண்டும் எனவும் இதற்குத் தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...