நாட்டை காப்பாற்ற வேண்டுமென்றால் பாஜக வை விரட்ட வேண்டும். அதற்கு ஈகோ பார்க்காமல் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என தெரிவித்தார்.
கோவை: கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நாட்டை காப்பாற்ற வேண்டுமென்றால், "பாஜக வை விரட்ட வேண்டும்" என தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அண்மையில் நடைபெற்ற ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக நான்கில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
ஏற்கனவே ஆண்ட மாநிலங்களில் மீண்டும் ஆளும் வாய்ப்பை பெற்றுள்ளது. ஆனால் இது மகத்தான வெற்றி என பாஜகவினர் தம்பட்டம் அடிக்கிறார்கள். பிரதமரே இமாலய வெற்றி என்கிறார்.
இதை வைத்து தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் ஆட்சியைப் பிடிப்போம் என்கிறார்கள். ஆனால் உ பி யில் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் சரிவைச் சந்தித்துள்ளனர். எனவே இது பாஜவுக்குச் சாதகம் என கூற முடியாது என தெரிவித்த திருமாவளவன், காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஒன்றாகச் சேராமலும் மத வெறுப்பு அரசியலை கடைப்பிடிப்பதாலும் இந்த தோல்வி என அவர் தெரிவித்தார்.
மேலும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி,வேலை வாய்ப்பு பற்றி பாஜக பேசவில்லை என்றும் அதற்கு மாறாக ஜெய்ஸ்ரீராம் என்றும் இஸ்லாமிய எதிர்ப்பு மூலம் மக்களைத் திசைதிருப்பப் பார்க்கிறார்கள் என அவர் குற்றம்சாட்டினார்.

இந்தியாவைச் சூழ்ந்துள்ள இந்த ஆபத்தை விரட்டக் காங்கிரஸ் இடதுசாரி உள்ளிட்ட அனைத்து அரசியல் அமைப்புகள் ஒன்று சேர வேண்டும் என்றும் ,தமிழக முதல்வர் ஸ்டாலினின் சமூக நீதி கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சிக்கு அனைத்து அமைப்புகளும் ஆதரவு அளிக்க வேண்டும் எனவும், அனைத்து தேசிய கட்சிகள் மற்றும் மாநிலக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் அதேபோல் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மையால் பாஜக வெற்றி பெற்று விட கூடாது எனவும் அவர் கேட்டுக்கொண்டார்
மேலும் ஆணவக் கொலைகளுக்கு எதிராகச் சட்டம் இயற்ற வேண்டும். மாநில அரசால் கூட இந்த சட்டம் இயற்ற முடியும் எனத் தெரிவித்த திருமாவளவன், பாஜக இத்தகைய ஆணவக் கொலைகளை ஊக்கப்படுத்தும் என்பதால் தமிழக முதலமைச்சர் இந்த சட்டத்தை இயற்ற வேண்டும் எனவும் கோகுல்ராஜ் கொலை தீர்ப்பு என்பது இது போன்ற ஆணவக் கொலைகளுக்கு முடிவு கட்டும் என நினைக்கிறேன் எனக்கூறய அவர், உச்சநீதிமன்றம் சாதிமத மோதல்களைத் தடுக்க தனி உளவுப் பிரிவு உருவாக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. எனவே தமிழக முதல்வர் உடனடியாக இந்த தனிப்பிரிவை உருவாக்குவார் என்ற நம்பிக்கை உள்ளதாக அவர் தெரிவித்தார்.

நாட்டை காப்பாற்ற வேண்டுமென்றால் பாஜக வை விரட்ட வேண்டும். அதற்கு ஈகோ பார்க்காமல் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் எனதெரிவித்த அவர், எந்த கட்சியின் தலைமையில் ஒன்றிணைய வேண்டும் என்பது முக்கியமல்ல. அனைத்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டமைப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் உணர்த்துவதாகத் தெரிவித்தார்.