சாமளாபுரம் பகுதியில் 12-நாட்களாகப் போராடிவரும் மக்களுக்கு தொல்.திருமாவளவன் நேரில் சென்று ஆதரவு

திருப்பூர் சாமளாபுரம் பகுதியில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் மக்களை அப்புறப்படுத்தும் நோக்கில் நீர்வளத்துறை நோட்டிஸ் அனுப்பி உள்ளது அதிர்ச்சி அளிக்கின்றது என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.



திருப்பூர்: பன்னிரண்டு நாட்களாகப் போராடிவரும் அருந்ததியின மக்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.



நூற்றாண்டுகளுக்கும் மேலாக வசித்துவரும் அருந்ததியின மக்களுக்கு குடியிருக்கும் இடத்தை நத்தம் நிலமாக வகை மாற்றம் செய்து உரியப் பட்டா வழங்கவேண்டும் திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பகுதியில் 12 நாட்களாகப் போராடிவரும் மக்களைச் சந்தித்த பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேட்டியளித்துள்ளார்.



திருப்பூர் மாவட்டம் சாமலாபுரம் கருப்பராயன் கோவில் அருகில் அருந்ததியினர் காலனியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இதில் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அருந்ததியின மக்கள் வசிக்கும் பகுதி நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதியாக உள்ளது என்றும் இந்த பகுதியில் உள்ள அருந்ததியின மக்கள் 21-நாட்களுக்குள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு பொதுப்பணித் துறையின் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இந்நிலையில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதியில் மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய அருந்ததியின அருந்ததிய மக்களை காலி செய்யக் கோரியதைக் கண்டித்து சாமலாபுரம் அருந்ததியர் காலனியில் வசிக்கும் பொதுமக்கள் 12-வது நாளாக வீடுகளில் கருப்புக்கொடி ஏந்தி தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பன்னிரண்டு நாட்களாகப் போராடிவரும் அருந்ததியின மக்களுக்கு ஆறுதல் கூறும் வகையிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை நேரில் சந்தித்த சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் போராட்டத்தில் ஈடுபட்டுவருபவர்களுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசினார்.

மேலும் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக மூன்று தலைமுறையாக வசித்துவரும் மக்களுக்குக் குடியிருப்பு பகுதியை நத்தம் நிலமாக வகை மாற்றம் செய்து உரியப் பட்டா வழங்கவேண்டும் எனவும், இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...