பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார் பேட்டி

முதலமைச்சரின் அறிவுரையின்படி, பொதுமக்கள் விரும்பும் வகையில் காவல்துறை செயல்படும் என்று கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார் கூறினார்.


கோவை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் ஆட்சியர்கள், காவல்துறை, வனத்துறை அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் மக்கள் நலன் மற்றும் பாதுகாப்புக்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

கூட்டம் முடிந்து கோவை திரும்பிய நகர காவல் ஆணையர் பிரதீப் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மக்கள் நலம், சமுதாய நல்லிணக்கம், குற்றங்கள் குறைந்த ஒரு வாழ்க்கை முறை ஆகியவற்றை தலையாய கடமையாகக் கொண்டு காவல்துறை செயல்பட வேண்டும் என்று முதலமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

அதன்படி கோவையில் மக்கள் விரும்பும் வகையில் காவல் துறை செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். சாதி, மதச் சண்டைகள் இன்றி மக்கள் உரியப் பாதுகாப்பு மற்றும் அச்சமின்றி வாழ நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போதைப் பொருள், பொருளாதார குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.

அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் உரிய ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களுடன் நிரூபித்து குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுக்கொடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கும் கடும் தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும்.

தற்போது பொருளாதார குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அதைத் தடுக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். கோவை நகரில் மீண்டும், மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுகிறார்கள்.

கடந்த ஆண்டு 70 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இந்த ஆண்டு இதுவரை 18 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்றார். தொடர்ந்து அவர் கோவை நகரில் மத மோதல்களைத் தடுக்கும் சிறப்புப் பிரிவுக்கு நான் தலைவராக உள்ளேன்.

சிறிய, சிறிய பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே தீர்த்தால் கலவரம், வன்முறை போன்ற சம்பவங்கள் நடைபெறாது. கோவையைப் போல் மற்ற மாவட்டங்களிலும் இந்த சிறப்புப் பிரிவு அமைக்கப்படுவது வரவேற்கத்தக்கது.

கோவை நகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் மூலம் புகார் வந்தால் 2 நிமிடம் 59 நொடிகளில் சம்பவ இடத்தை அடைவதில் கோவை நகர போலீஸ் மாநில அளவில் முதலிடத்தில் உள்ளது. இதற்காக நவீன வாகனங்கள் கோவை காவல்துறைக்கு வழங்கப்பட்டு உள்ளது.

புதிதாகக் காவலர்கள் தேர்வு மூலம் கோவைக்குக் காவலர்கள் நிரப்பப்பட உள்ளனர். குடியிருப்புகள் பெருக்கத்துக்கு ஏற்ப புதிய போலீஸ் நிலையங்கள் உருவாக்கப்பட உள்ளன. கோவை நகரம் வரும் ஆண்டில் இ-நிர்வாகத்தில் முதலிடம் பெற்று மாநில விருதை பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் அவர் விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் அதன்படி கோவை நகரில் விபத்து சாவு நடைபெற்ற பகுதிகளை பிளாக் ஸ்பாட் என்று முறையில் கண்காணித்து வருகிறோம். மேலும் விபத்துகள் நடக்காமல் தடுக்கக் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...