கல்வியில் சிறந்த தமிழ்நாட்டுக் கல்வியை சீரழித்தது யார்? முதலமைச்சருக்கு காடேஸ்வரா சுப்பிரமணியம் கேள்வி..!

மாநில அரசின் பாடத்திட்டம் தற்கால கல்வி நிலைக்குப் போதுமானதாக இருக்கிறதா? என்பதை முதலமைச்சர் கல்வியாளர்களை கொண்டு ஆராய்ந்து முடிவு செய்யட்டும் என்றும் கருத்து.


கோவை: கல்வியில் சிறந்த தமிழ்நாட்டுக் கல்வியை சீரழித்தது யார்? முதலமைச்சருக்கு காடேஸ்வரா சுப்பிரமணியம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோவையில் நடைபெற்ற பல்கலைக்கழகத் துணைவேந்தர் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கல்வி மாநில அரசின் பட்டியலில் வர வேண்டும். மத்திய அரசு பிற்போக்குத்தனத்தை கல்வியில் புகுத்துவதைத் தடுக்க வேண்டும் எனக் கூறியது நகைப்புக்குரியது.

கல்வியில் சிறந்த தமிழ்நாடு என பாரதி ஓங்கி குரல் கொடுத்துப் பாடினான். அது அந்தக் காலம். கல்வி நிறுவனங்கள் பல்கிப் பெருகுவதற்கு முன்னரும் கூட தமிழர்கள் இந்திய அளவில் கல்வியால் புகழ்பெற்று விளங்கினார்கள்.

நீதித்துறை, பாராளுமன்றம், பல்கலைக்கழகம், மருத்துவத்துறை, விண்வெளி ஆராய்ச்சி என எல்லாவற்றிலும் முன்னணியில் இருந்ததுடன், எல்லா இடங்களிலும் தமிழனுக்குத் தனி மரியாதை இருந்தது.

ஆனால், நீட் தேர்வை எங்கள் மாணவர்களால் எழுத முடியாது என தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்காக கொடி பிடித்து மாணவர்களை அவமானப்படுத்துகிறார் மாநில அரசின் முதலமைச்சர்.

மருத்துவ நுழைவுத் தேர்வையோ, புதிய கல்விக் கொள்கையையோ எந்த மாநில அரசும் மறுப்போ, எதிர்ப்போ தெரிவிக்காத நிலையில் தமிழக அரசு மட்டும் கூறி வருகிறது.

மத்திய அரசு செயல்படுத்தும் எந்த நல்ல திட்டத்தையும் எதிர்க்க வேண்டும் என்ற நிலையை தமிழக அரசு எடுப்பது துரதிருஷ்டவசமானது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக்கொள்கை அரசியல்வாதிகளால் கொண்டு வரப்பட்டது அல்ல, அது கல்வியாளர்களால் ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் உலகத் தரத்திற்கு இந்திய மாணவர்கள் முன்னேற முடியும் என்பது கல்வியாளர்கள் கருத்தாக இருக்கிறது.

மாநில அரசின் பாடத்திட்டம் தற்கால கல்வி நிலைக்குப் போதுமானதாக இருக்கிறதா? என்பதை தமிழக முதலமைச்சர் கல்வியாளர்களை கொண்டு ஆராய்ந்து முடிவு செய்யட்டும். மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் கல்வியை ஏதோ வேலைக்கான சான்றிதழுக்கான கருவியாக பயன்படுத்துவது சரியானதா? என்பதை பெற்றோர்களும் உணர வேண்டும்.

தமிழக முதலமைச்சர் எதனை பிற்போக்குத்தனம் என சுட்டிக்காட்டுகிறார்? என்ற கேள்விக்கு மக்களிடம் பதில் அளிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...