உக்ரைன் ராணுவத்தில் பணியாற்றி வரும் கோவை மாணவர் இந்தியா திரும்ப சம்மதம்

உக்ரைன் ராணுவத்தில் இணைந்த தனது மகன் இந்தியாவிற்கு திரும்புவதற்கு சம்மதம் தெரிவித்திருப்பதால் கோவை இளைஞரின் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கோவை: உக்ரைன் ராணுவத்தில் பணியாற்றி வரும் கோவை மாணவர் விரைவில் இந்தியா திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை மாவட்டம், துடியலூர் அருகே உள்ள சுப்பிரமணியம்பாளையத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் சாய்நிகேஷ் உக்ரைனுக்கு விமானவியல் படிப்பதற்காக சென்றிருந்தார்.

இதனிடையே கடந்த மாதம் மார்ச் 24-ம் தேதி முதல் உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் அங்குள்ள இந்தியர்களை மத்திய அரசு பாதுகாப்பாக மீட்டது.

ஒரு மாணவர் மட்டும் உயிரிழந்தார். அதே சமயம் கோவையை சேர்ந்த சாய்நிகேஷ் என்ற மாணவர் மட்டும் நாடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் தொடர்பு கொண்டு கேட்டபோது, தான் உக்ரைன் ராணுவத்தில் இணைந்திருப்பதாகவும், ரஷ்ய படையை எதிர்த்து போரிடுவேன் என்று கூறியுள்ளார்.

இதனை கேட்ட பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மத்திய, மாநில அரசுக்கு நடந்த சம்பவத்தை பெற்றோர்கள் தெரிவித்தனர். உடனடியாக மீட்டு தரும்படி கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதன் பின்னர் மீண்டும் மாணவரிடம் தொடர்பு கொண்ட பெற்றோர்கள், போர் சமயத்தில் அங்கு இருப்பது நல்லது இல்லை, உடனடியாக இந்தியா திரும்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

ஒரு வழியாக நாடு திரும்ப மாணவர் சாய் நிகேஷ் ஒப்புக்கொண்டுள்ளார். இது பற்றி இந்திய தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் மாணவர் இந்தியா திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...