வெயிலின் தாக்கத்தால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் சரிவு..! குடிநீருக்காக எடுக்கப்படும் நீரின் அளவும் குறைப்பு..!

கடந்த நாள்களில் குடிநீருக்காக தினமும் 9 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 7 கோடி லிட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது.



கோவை: வெயிலின் தாக்கத்தால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் சரிந்துள்ளதால் குடிநீருக்காக எடுக்கப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.

கோவை சிறுவாணி அணையிலிருந்து கோவை மாநகரில் 26 வார்டுகளுக்கும், நகரையொட்டிய கிராமங்களுக்கும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தென்மேற்குப் பருவமழை நன்றாகப் பெய்ததால் அணையின் நீர்மட்டம் 874 மீட்டர் வரை உயர்ந்தது.

முழுக் கொள்ளளவு சிறுவாணி அணையைப் பராமரிக்கும் கேரள அரசு, பாதுகாப்பு காரணமாக அணையின் முழுக் கொள்ளளவான 878.50 மீட்டரை அடைய விடாமல், அணையில் இருந்து தண்ணீரை ஆற்றில் திறந்து விடுகிறது.

இதன் காரணமாக, 2020ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்துக்கு பிறகு, சிறுவாணி அணை முழுக் கொள்ளளவை எட்டவில்லை.

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 871 மீட்டராக இருந்த அணையின் நீர்மட்டம், பிப்ரவரி மாதம் முதல் வெயிலின் தாக்கத்தால் படிப்படியாக சரியத் தொடங்கியது. நேற்றைய நிலவரப்படி, சிறுவாணி அணையின் நீர்மட்டம் 868 மீட்டராக உள்ளது.

7 கோடி லிட்டர் நீர்மட்டம் குறையத் தொடங்கி உள்ளதால், கடந்த நாள்களில் குடிநீருக்காக தினமும் 9 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது, 7 கோடி லிட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறும்போது,

தற்போது அணையில் உள்ள நீர் இருப்பு, மே இறுதி அல்லது ஜூன் வரை தாக்குப்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணையில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்தால், அணையிலிருந்து எடுக்கப்படும் நீரின் அளவும் மேலும் குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...