கோவையில் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்..!! ஆர்.எஸ்.புரத்தில் வங்கி வாடிக்கையாளர் ஓ.டி.பி. (OTP) சொன்னதால் ரூ.86 ஆயிரம் போச்சு...!

கடன் வசதி செய்து தருவதாகக் கூறி வங்கி விவரங்கள் மற்றும் ஓ.டி.பி கேட்டு ரூ.86 ஆயிரம் திருடிய மர்ம நபரை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


கோவை: கோவை ஆர்.எஸ்.புரத்தில் வங்கி வாடிக்கையாளரிடம் ஒ.டி.பி. (OTP) கேட்டு ரூ.86 ஆயிரம் திருடிய நபரை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை ஆர்.எஸ். புரம் டிபி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (57). இவருக்கு சில நாட்களுக்கு முன் செல்போனில் ஒரு அழைப்பு வந்தது.

அதில் பேசிய நபர் வங்கி கிரெடிட் கார்டு பிரிவில் எக்ஸிக்யூடிவ் ஆக பணியாற்றுவதாகவும் உங்களுக்கு தேவையான கடன் ஏற்பாடு செய்து தரப்படும் என கூறினார். இதைக்கேட்ட சதீஷ் வங்கியில் கடன் பெற சம்மதம் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து அந்த நபர் செல்போனில் பல்வேறு தகவல்களைக் கேட்டார். வங்கிக் கணக்கு எண் மற்றும் ஓடிபி எண்களை அனுப்புமாறு கூறினார். சதீஷ் விவரங்களையும் 2 முறை ஓ.டி.பி எண்களையும் அனுப்பியதும் அவரது வங்கிக் கணக்கிலிருந்து 86,369 ரூபாய் மோசடியாக எடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக சதீஷ் அளித்த புகாரின் பேரில் கோவை நகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...