'ஜெய் பீம்' - 'பாரத் மாதா கீ ஜெய்' என்ற எதிர் முழக்கங்களில் அதிர்ந்த கோவை விமான நிலையம்

கோவை விமான நிலையத்திற்கு வெவ்வேறு கட்சிகளை சேர்ந்த இரு தலைவர்களும் வந்த நிலையில், திருமாவளவனை வரவேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்களும், தமிழிசை சவுந்தரராஜனை வரவேற்க பாஜகவினரும் மாறி மாறி கோஷங்களை எழுப்பினர்.



கோவை: இன்று கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனும், அதேபோல் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரும் கோவைக்கு வருகை தந்துள்ளனர். 



கோவை விமான நிலையத்திற்கு வெவ்வேறு கட்சிகளை சேர்ந்த இரு தலைவர்களும் வந்த நிலையில், திருமாவளவனை வரவேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்களும், தமிழிசை சவுந்தரராஜனை வரவேற்க பாஜகவினரும் கூடியிருந்தனர். 



முதலில், விமான நிலையத்தில் இருந்து வெளிவந்த தொல் திருமாவளவனை அவர்களது தொண்டர்கள் அழைத்துச் சென்ற பொழுது "எழுச்சி செம்மல்" என்ற கோஷங்களை எழுப்பினர். அதேசமயம், விமான நிலையத்தில் இருந்து வந்த தமிழிசை சவுந்தரராஜன் வரவேற்கும் விதமாக பாஜகவினர் "பாரத் மாதா கி ஜே" என்ற முழக்கங்களையும் பாரதிய ஜனதா கட்சி வாழ்க என்றும் எழுப்பினர். 

இதனையடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் "ஜெய் பீம்" என்ற முழக்கங்களை எழுப்பினர் பாஜகவினரும் பாரத் மாதா கி ஜே என்ற முழக்கங்களை எழுப்பினர். 



இரு கட்சியினரும் மாறி மாறி அவர்களது முழக்கங்களை எழுப்பிக் கொண்டால், கோவை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...