பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, முப்படை அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கும் இடமான வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் புதிய தளபதி நியமனம்.
நீலகிரி: குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி புதிய தளபதியாக லெப்.ஜெனரல் மோகன் பொறுப்பேற்றார்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன் பகுதியில் ராணுவ பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, முப்படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இங்கு கமாண்டன்ட்டாக, லெப்.,ஜெனரல் கலோன் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில், நேற்று சென்னையைச் சேர்ந்த லெப்., ஜெனரல் மோகன் புதிய கமாண்டன்ட்டாக பொறுப்பேற்றார். இவர், 36 ஆண்டுகளாக ராணுவத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார்.
குறிப்பாக, ஆப்ரிக்க நாட்டின், சியரா லியோனில் ஐக்கிய நாடுகளின் தூதராகவும், வியட்நாம், லாவோஸ், கம்போடியாவில், இந்தியாவின் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.