கோவை கணபதி அருகே பைனான்சியர் வீட்டின் கதவை உடைத்து 7 சவரன் நகை திருட்டு..!

பின்பக்கக் கதவில் பதிவான ரேகைகளை சேகரித்து சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: கோவையில் பைனான்சியர் வீட்டின் கதவை உடைத்து 7 சவரன் நகை திருடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை கணபதி வரதராஜுலு நகரை சேர்ந்தவர் தங்கபிரபு (30). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் தங்கபிரபு தனது குடும்பத்துடன் வால்பாறையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது.

இந்நிலையில், இன்று அதிகாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டிலிருந்த பீரோ திறக்கப்பட்டு துணிகள் கலைந்த நிலையில் இருந்துள்ளது. மேலும் உள்ளே இருந்த சுமார் 7 பவுன் தங்க நகைகள் மாயமானது தெரியவந்தது.

இதையடுத்து, வீட்டின் பின்னால் சென்று பார்த்தபோது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து தங்கபிரபு சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பின்பக்கக் கதவில் பதிவான ரேகைகளை சேகரித்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...