சிறந்த மாவட்ட திறன் திட்டம் மற்றும் செயலாக்கத்திற்கான விருதில் கோவை மாவட்ட ஆட்சியருக்கு இரண்டாம் இடம்..!

முதலிடம் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கருக்கும், மூன்றாம் இடம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜுக்கும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


கோவை: சிறந்த மாவட்ட திறன் திட்டம் மற்றும் செயலாக்கத்திற்கான விருதில் கோவை மாவட்ட ஆட்சியருக்கு இரண்டாம் இடம் வழங்கப்பட்டுள்ளது.

2021-22ம் ஆண்டு சிறப்பாக பணியாற்றிய மாவட்ட ஆட்சியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.

இதில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செய்த மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு (முதல் மூன்று இடம்) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்குகிறார்.

அதன்படி, 2021ம் ஆண்டு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையில் சிறந்த மாவட்ட திறன் திட்டம் மற்றும் செயலாக்க விருது மூன்று மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்படுகிறது.

அதன்படி, இரண்டாவது இடமாக கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரனுக்கு வழங்கப்பட்டுள்ளது. முதலிடம் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கருக்கும் மூன்றாம் இடம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இவ்விருதினை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இந்நிகழ்வில் சென்னை தலைமைச் செயலாளர் உட்பட பல்வேறு அமைச்சர்கள் உடனிருந்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...