கோவை தொண்டாமுத்தூர் அருகே கேட்டரிங் மாஸ்டருக்கு அரிவாள் வெட்டு - ஓட்டல் உரிமையாளர், தொழிலாளி கைது..!

மதுபான கடையில் ஏற்பட்ட மோதலில் ஓட்டல் உரிமையாளர் மற்றும் தொழிலாளர் கேட்டரிங் மாஸ்டரை அரிவாளால் சரமாரியாக வெட்டியதால் பரபரப்பு.


கோவை: கோவையில் கேட்டரிங் மாஸ்டரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் ஓட்டல் உரிமையாளர் மற்றும் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

கோவை தொண்டாமுத்தூர் அருள் ஜோதி நகர் பகுதியில் குடியிருப்பவர்கள் ராஜசேகர் (42). இவர் கேட்டரிங் மாஸ்டர். இவருடன் ஜெகதீஷ் (32) மற்றும் பிரகாஷ் என்பவர் வேலை செய்து வருகின்றனர்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, தொண்டாமுத்தூர் போளுவம்பட்டி பிரிவு அருகில் ஒரு ஓட்டலை ராஜசேகர் லீசுக்கு எடுத்ததாக தெரிகிறது. அப்போது கேட்டரிங் ஆர்டர் அதிகமாக வருவதால், ராஜசேகர் அடிக்கடி வெளி ஊர்களுக்கு செல்வது வழக்கம். கடையைப் பார்த்துக் கொள்ள முடியாது என்பதால், தனது உறவினரும் உடன் வேலை செய்பவருமான ஜெகதீசனை கடையைப் பார்த்துக் கொள்ளும்படி கூறியுள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக கடையில் ஜெகதீஸ் வேலை செய்யாமல் குடிபோதையில் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் தகராறு செய்து சரியாக கடையை நடத்தாததாக தெரிகிறது.

இதனால் ராஜசேகர் மற்றும் பிரகாஷ் இருவரும் நேற்று காலை இது சம்பந்தமாக ஜெகதீசனிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மீண்டும் மாலை ஜெகதீஸ் வீட்டிற்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சமாதானப்படுத்தி அக்கம்பக்கத்தில் அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, ஜெகதீசன் மாலை நரசிபுரம் ரோடு குபேரபுரி டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்து உள்ளார். அப்போது அங்கு சென்ற பிரகாஷ் மற்றும் ராஜசேகர் மீண்டும் ஜெகதீசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பிரகாஷ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஜெகதீசன் வலது கை, இடது கால், வயிறு உள்ளிட்ட மூன்று இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார். அங்கு மது குடித்துக் கொண்டிருந்த சிலர் பார்த்து பதறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

உடனடியாக பாரில் வேலை செய்பவர்கள் தொண்டாமுத்தூர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தொண்டாமுத்தூர் போலீசார் ஜெகதீசன் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஜெகதீசன் தாயார் மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து பிரகாஷ், ராஜசேகர் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...