கோவையில் ஓவர் டேக் செய்ய முயன்ற கார் எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து - வாகன ஓட்டி படுகாயம்..!

புகாரின் பேரில், காரை ஓட்டி வந்த அன்னூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் குமார் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவையில் ஓவர் டேக் செய்ய முயன்ற கார், எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானதில் வாகன ஓட்டி விபத்தில் சிக்கிக் காயமடைந்தார்.

கோவை மணிகாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசுப்பிரமணியம். சம்பவத்தன்று கணபதியிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், இருசக்கர வாகனம் கணபதி அருகே உள்ள தனியார் பள்ளியைக் கடக்கும் போது எதிரே வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், அதில் கணபதி நோக்கி வந்த கார் இருசக்கர வாகனம் ஒன்றை ஓவர்டேக் செய்ய முயன்றதும், அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகும் காட்சிகள் தெளிவாக பதிவாகி உள்ளன.

இந்த விபத்தில் ராமசுப்பிரமணியத்திற்கு தோள்பட்டை மற்றும் கால் முறிவு ஏற்பட்டதனை தொடர்ந்து அவசர ஊர்தி மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மேலும், இதுதொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் காரை ஓட்டி வந்த அன்னூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் குமார் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...