இதுகுறித்து தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
கோவை: கோவை மாவட்டம் பொன்னாங்காணி கிராமத்தில் இரு சமூகத்தை சேர்ந்தவர்களிடையே ஏற்பட்ட மோதல் குறித்து தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பொன்னாங்காணி கிராமத்தில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ராமு என்பவர் உயிரிழந்தார்.
அச்சம்பவம் தொடர்பாக 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 14 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உரிய விசாரணை மேற்கொண்டு தீர்ப்பு வழங்க வேண்டுமென பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் எழுப்பப்பட்டது.
இதனையடுத்து, இன்று உயிரிழந்த ராமுவின் இல்லத்திற்கு தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் அருண்ஹல்டர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். அவரிடம் நடந்தது பற்றிக் கூறப்பட்டது.

இதில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் உட்பட உயரதிகாரிகள் விசாரணையில் பங்கேற்றுள்ளனர்.ராமுவின் குடும்பம் மற்றும் பொன்னாங்காணி கிராம மக்கள், காவல் துறை என அனைத்து தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.