சூரிய சக்தியால் செயல்படும் 'அவுட்லெட் சென்சார் சிஸ்டம்' மூலம் குறிப்பிட்ட ஒரே இடத்திலிருந்து, பொறியாளர்களால் கண்காணித்து கட்டுப்படுத்த முடியும்.
கோவை: கோவை அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள குளம், குட்டைகளில், வால்வு மற்றும் 'சோலார் பேனல்' பொருத்தும் பணி நடந்து வருகிறது.
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 1,045 குளம், குட்டைகளில் நீர் செறிவூட்டப்பட உள்ளது.
இதற்காக, பவானி, நல்லகவுண்டம்பாளையம், திருவாச்சி, அன்னூர் உள்ளிட்ட ஆறு இடங்களில் நீரேற்று நிலையங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், குளம், குட்டைகளில் சூரிய சக்தியால் செயல்படும் 'அவுட்லெட் சென்சார் சிஸ்டம்' எனப்படும் உபகரணம் பொருத்தப்பட்டு வருகிறது. இதற்கான சோலார் பேனல் மற்றும் வால்வு ஆகியவற்றைப் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,
'இக்கருவியை, குறிப்பிட்ட ஒரே இடத்திலிருந்து, பொறியாளர்களால் கண்காணித்துக் கட்டுப்படுத்த முடியும். குளத்தில் ஏற்கனவே உள்ள தண்ணீரின் அளவு, திட்டத்தின்படி திறந்து விடப்பட வேண்டிய தண்ணீரின் அளவு ஆகியவற்றை கணினி உதவியுடன் அறிந்து அதற்கேற்ப தண்ணீர் திறந்து விட முடியும்' என்றனர்.