மாவோயிஸ்ட் நடமாட்டத்தின் எதிரொலியாக தமிழக, கேரள எல்லை சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரம்..!

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: மாவோயிஸ்ட் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் தமிழக, கேரள எல்லை சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன், கேரள மாநிலம், கோழிக்கோடு, முத்துக்காடு, திருவண்ணமூலா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், 2 பெண்கள் உட்பட 6 மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, தமிழக, கேரள எல்லை சோதனை சாவடிகளில், போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளா மற்றும் தமிழ்நாட்டில் இருந்து செல்லும் வாகனங்கள், தீவிர சோதனைக்குப் பிறகே, அனுமதிக்கப்படுகின்றன.

மேலும், புதிய நபர்கள் நடமாட்டம் இருந்தால், தகவல் தெரிவிக்குமாறு, பழங்குடியின கிராம மக்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். மாவோயிஸ்ட் தடுப்பு அதிரடிப்படையினரும், மலைக்கிராமங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...