கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்புகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகனம் நிறுத்துமிடத்தில் புதர்களை நீக்க பொதுமக்கள் வலியுறுத்தல்..!

ஆட்சியர் அலுவலக வளாகத்தின் பின்புறம் உள்ள வாகன நிறுத்த இடத்தில், கடந்த சில மாதங்களாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி இருப்பதால் பாம்புகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்புகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் வாகனம் நிறுத்துமிடத்தில் புதர்களை நீக்க பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், அடிக்கடி பாம்பு மற்றும் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை மற்றும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலையில் கூட, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாகனம் நிறுத்த சென்ற ஒருவர் பெரிய பாம்பு ஊர்ந்து செல்வதை தனது செல்போனில் படம் எடுத்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு, ஆட்சியர் வளாகத்தில் உள்ள ஒரு அலுவலகத்தில் பாம்பு ஒன்று புகுந்தது. பின்னர், பாம்பு பிடிப்பவர் ஒருவரை அழைத்து பாம்பினை தேடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பராமரிப்பின்றி ஆங்காங்கே புதர் மண்டி கிடக்கும் இடங்கள் இருப்பதால் தான் பாம்புகள், தேள் போன்ற விஷ உயிரினங்கள் அச்சுறுத்தி வருவதாக, அங்குள்ள ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை முன்வைத்து வந்த நிலையில், இன்று மீண்டும் பாம்பு ஒன்று அப்பகுதியில் தென்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குறிப்பாக, வாகனங்களை நிறுத்த, ஆட்சியர் அலுவலக வளாகத்தின் பின்புறம் உள்ள இடத்தில், கடந்த சில மாதங்களாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, இப்பகுதியில் பாம்புகள் நடமாடுவதால், ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர், புதர்களை அகற்றவும், பாம்புகளை பிடித்து வனப்பகுதிக்குள் பத்திரமாக விடவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...