தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பிக்க முயன்ற போது அங்கிருந்தவர்கள் அவரை மடக்கிப் பிடித்து துடியலூர் போலீசில் ஒப்படைத்தனர்.
கோவை: கோவை துடியலூர் அருகே உணவகத்தில் பார்சல் வாங்குவது போல நடித்து 10 பவுன் சங்கிலியை பறித்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
கோவை துடியலூர் கவுன்டர்மில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுச்சாமி இவர் வீட்டில் சிறிய அளவிலான உணவகம் வைத்து நடத்தி வருகிறார். அவருடன் அவரது மனைவி லீலாவதி மற்றும் அவரது தாயாரும் உணவகத்தை கவனித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு சமையல் வேலைகளை முடித்துவிட்டு, உணவகத்தின் வாசல் அருகே லீலாவதி அமர்ந்து இருந்ததாக தெரிகிறது. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் வண்டியை ஆன் செய்தவாறே நிறுத்தி விட்டு, உணவு வாங்குவது போல் அருகே வந்துள்ளார்.
அப்போது திடீரென லீலாவதி கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தாலிச் செயின் மற்றும் 3 சவரன் தங்கச் செயின் ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பிக்க முயன்றுள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் இருசக்கர வாகனத்தில் சென்றவரை மடக்கிப் பிடித்து துடியலூர் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் பிடிபட்டவர்கள் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த பக்கிரிசாமி (36) என்பதும், அவர் கோவை துடியலூர் வெள்ளக்கிணறு பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.