கோவையில் ஒட்டகப் பால் டீக்கடை...!

கோவை சூலூர் அடுத்த நீலம்பூர் புறவழிச் சாலையில், மணிகண்டன் என்பவர் ஒட்டகங்களைக் கொண்டு பால் பொருள்கள் விற்பனை செய்யும் ஒட்டக பால் பண்ணையை தொடங்கியுள்ளார்.


கோவை: கோவை மாவட்டம் சூலூரில் ஒட்டகப் பண்ணையில் பால் கறந்து அதில் தேநீர் விற்பனை செய்யும் டீக்கடை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கோவை சூலூர் அடுத்த நீலம்பூர் புறவழிச் சாலையில், மணிகண்டன் என்பவர் ஒட்டகங்களைக் கொண்டு பால் பொருள்கள் விற்பனை செய்யும் ஒட்டக பால் பண்ணையை தொடங்கியுள்ளார். இந்த பண்ணையில் ஒட்டகங்கள் தவிர குதிரை, முயல், வாத்து, கோழி ஆகியவை வளர்க்கப்பட்டு வருகின்றன.



காலை மற்றும் மாலை வேளைகளில் ஒட்டகத்திலிருந்து பால் கறந்து நேரடியாகதேநீர் விற்பனை நடைபெறுகிறது. பண்ணையை பார்வையிட பொதுமக்களிடம் 20 ரூபாய் நுழைவுக்கட்டணமாகவசூலிக்கப்படுகிறது.இங்கு ஒரு கப் டீ 70 ரூபாய்க்கும் ஒரு லிட்டர் பால் 550 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து பண்ணை உரிமையாளர் மணிகண்டன் பேசும்போது, ஒட்டகப் பாலை கொண்டு பால் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும், பண்ணையை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது எனவும் தெரிவித்தார்.



குஜராத் மாநிலத்திலுள்ள கட்ச் மாவட்டத்தில் இருந்து 6 ஒட்டகங்கள் கொண்டு வரப்பட்டது எனவும்,

எல்லா சூழலிலும் வாழக்கூடிய வகையில் ஒட்டகங்கள் இருப்பதால், இங்கு சிரமமின்றி பராமரிக்கப்பட்டு வருகிறது எனவும் கூறிய அவர், ஒட்டகம் மற்றும் குதிரை சவாரி பயிற்சியும் அளிக்கப்பட்டு வருவதாகவும்தெரிவித்தார்.



கடந்த 2000 ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றிக் கொடி கட்டு என்ற திரைப்படத்தில் டீ மாஸ்டரிடம் ஒட்டகப் பாலில் டீ போடுமாறு நடிகர் வடிவேலு கூறும் நகைச்சுவை காட்சியை மெய்ப்பிக்கும் வகையில் கோவையில் ஒட்டகப் பால் டீ விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...