திருப்பூர் மாநகராட்சி 46-வது வார்டு மாமன்ற உறுப்பினர் புதிதாக துவங்க உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு

புதிதாக பணி துவங்கப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டபோது அப்பகுதி பொதுமக்கள் சாக்கடை கால்வாய் மற்றும் குடிநீர் பிரச்சனைகளைக் குறைகளாக தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி 46-வது வார்டு மாமன்ற உறுப்பினர் புதிதாக துவங்க உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்தார்.



திருப்பூர் 46-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி வி.ஜி.வி.கார்டன், வி.எஸ்.ஐ நகர் பகுதியில் புதிதாக பணி துவங்கப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டபோது அப்பகுதி பொதுமக்கள் சாக்கடை கால்வாய் மற்றும் குடிநீர் பிரச்சனைகளைக் குறைகளாக அவரிடம் தெரிவித்தனர்.



சம்மந்தப்பட்ட அரசு அதிகாரியை அழைத்து உடனே சரிசெய்ய வேண்டும் என்றும் தினமும் சாக்கடை கால்வாய் மற்றும் குடிநீர் பிரச்சனை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அவருடைய மொபைல் நம்பரை பொதுமக்களிடம் வழங்கியதோடு மேலும், ஏதேனும் பிரச்சனை வந்தால் தன்னை அணுகுமாறு அவருடைய மொபைல் நம்பரையும் கொடுத்துக் கூடிய விரைவில் இந்தப் பகுதியில் சாலைகள் மற்றும் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...