மாதம்தோறும் 200-க்கும் அதிகமான டன் மதுரை மல்லி கோவையிலிருந்து மும்பைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து உள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், உலக நாடுகளுக்கும் பல்வேறு விதமான கார்கோ பொருட்கள் விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன.
மதுரை புகழ் குண்டுமல்லி கோவை வழியாக தினமும் 1 டன் மும்பைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
இதுகுறித்து ஏர்லைன்ஸ் வட்டாரங்கள் கூறியதாவது:-
கோவை விமான நிலையத்தில் இருந்து இன்ஜினியரிங் பொருட்கள், காய்கறிகள், பழங்கள், துரித உணவு வகைகள், பூக்கள், மருத்துவ உபகரணங்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு கார்கோ பொருட்கள் புக்கிங் செய்யப்பட்டு விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன.
உள் நாட்டு போக்குவரத்து பிரிவின் கீழ் கோவையில் இருந்து மும்பைக்கு இயக்கப்படும் விமானத்தில் மதுரை மல்லிகை பூ சராசரியாக ஒரு டன் மற்றும் அதற்கு மேல் தினமும் புக்கிங் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது.
மாதம்தோறும் 200க்கும் அதிகமான டன் மதுரை மல்லி கோவையிலிருந்து மும்பைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. மும்பையில் வசிக்கும் தமிழர்கள் மதுரை மல்லி மீது கொண்டுள்ள ஆசையே தினமும் கோவை வழியாக மல்லிகைப்பூ விமானத்தில் கொண்டு செல்வதற்கு காரணமாக உள்ளது."
இவ்வாறு ஏர்லைன்ஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.