தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய கூடலூர் இளைஞர் கோவையில் கைது - 18.5 சவரன் தங்கம் பறிமுதல்!

விசாரணையில் கூடலூர் இளைஞர் மீது தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது.


கோவை: தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய கூடலூர் இளைஞரை போலீசார் கோவையில் கைது செய்தனர்.

கோவை சிங்காநல்லூர் பகுதியில் இறைச்சிக் கடை நடத்திவருபவர் சுரேஷ். இவர் சிங்காநல்லூர் நந்தனம் நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கம் போல், சுரேஷ் தனது இறைச்சிக்கடைக்குச் சென்றுவிட்டார்.

வீட்டில் அனைவரும் வெளியே நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளச் சென்ற நிலையில், பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து சுரேசின் வீட்டிலிருந்து 37-சவரன் தங்க நகை மற்றும் 3- லட்சம் பணத்தை மர்ம நபர் ஒருவர் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் சுரேஷ் புகாரளித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பட்ட பகலில் ஒரு மர்ம நபர் சுரேஷின் வீட்டில் கொள்ளையடித்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது.

அந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்த போலிசாருக்கு கோவை இருகூர் பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம நபர் சுற்றுவதாக போலிசாருக்கு வந்த தகவலை அடுத்து போலிசார் அந்த மர்ம நபரைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

மேலும் விசாரணையில் பிடிபட்ட நபர் நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த சுந்தர் என்ற புறா சுந்தர் என்பது தெரியவந்தது. மேலும் இவனிடம் இருந்து சுரேஷின் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட 37-சவரன் தங்க நகையில், 18.5-சவரன் தங்க நகையைத் தங்கக் கட்டியாகப் பறிமுதல் செய்தனர்.

மேலும் சுந்தரிடம் நடத்திய விசாரணையில், இவன் மீது தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் பதிவாகியிருந்தது.

இதனை அடுத்து கோவை சிங்காநல்லூர் போலிசார் சுந்தர் மீது கொள்ளை வழக்குப் பதிவு செய்து பவானி கிளை சிறையில் அடைத்தனர். பட்டப்பகலில் சுந்தர் நடத்திய கொள்ளை சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...