கோவை மாநகராட்சியில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுவதைக் குறைக்க “பசுமை செங்கல்” என்னும் புதிய இயக்கம்..!

கோவை மாநகராட்சியில் உள்ள 12 சேகரிப்பு மையங்களில் சனிக்கிழமை அன்று பிளாஸ்டிக் கழிவுகளைக் கொடுத்து சம்பாதிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகராட்சியில் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொட்டுவதைக் குறைக்க “பசுமை செங்கல்” என்னும் இயக்கத்தை அறிவித்துள்ளது.

கோவை மக்கள் இனி கோவை மாநகராட்சியின் (சிசிஎம்சி) மூலம் நகரம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள ‘பசுமை செங்கல்’ சேகரிப்பு மையங்களில் பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி சம்பாதிக்கலாம்.

கோவை மாநகராட்சி ரெசிடென்ட்ஸ் அவேர்னெஸ் அசோசியேஷன் (RAAC) மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டெக்ஸ்சிட்டி போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பிப்ரவரி 26 அன்று ‘பசுமை செங்கல்' என்னும் முயற்சியைத் துவங்கியுள்ளது.

கோவை மாநகராட்சியில் அமையப்பெற்றுள்ள 12 சேகரிப்பு மையங்களில் சனிக்கிழமை அன்று மக்கள் தங்களிடம் இருக்கும் பிளாஸ்டிக்குகளை கொண்டு சென்று ஒப்படைக்கலாம். மேலும், பிப்ரவரி 26, 2022ம் ஆண்டு துவங்கி அடுத்த ஆண்டு பிப்ரவரி 26 வரை ஒவ்வொரு வாரமும் இந்த செய்யல்பாடானது நடைபெறும்.

இதுகுறித்து கோவை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்:-

‘பசுமை செங்கல்’ தயாரிக்க, ஒன்று அல்லது இரண்டு லிட்டர் பிளாஸ்டிக் பாட்டிலில் உலர் பிளாஸ்டிக் ரேப்பர்களை நசுக்கி, அடைத்து கீழே தள்ள வேண்டும். ஒரு லிட்டருக்கும் குறைவான பாட்டில்கள் அல்லது ஈரமான மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகள் அதிகாரிகளால் நிராகரிக்கப்படுகின்றன.

தோராயமாக 4 - 5 கிலோ எடையுள்ள ஒவ்வொரு பச்சை செங்கலுக்கும் 5 ரூபாய் கிடைக்கும் என தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...