கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி ரூ.15 லட்சம் மோசடி; மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தனக்குத் தெரிந்தவர் எனக் கூறி மிரட்டல்..!

மேலும், இதே போல் பலரிடம் சுமார் 40 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்து தலைமறைவாக உள்ள தன்யா மற்றும் நண்பர் பிரதீப்பை போலீசார் தேடி வருகின்றனர்.



கோவை: கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி ரூ.15 லட்சம் மோசடி செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

கோவையை அடுத்த சூலூர் எஸ்.எல்.எஸ்., நகர் பகுதியைச் சேர்ந்த பரமசிவம் என்பவரின் மகன் முருகன் (25) இவர் பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து உள்ளார். அரசு வேலைக்காக தேர்வுகள் எழுத தயாராகி வருகிறார். 

மேலும், பகுதி நேரமாக மாலை நேரத்தில் பாஸ்ட்புட் கடை ஒன்றை சூலூர் பகுதியில் நடத்தி வருகிறார். இவருக்கு சூலூர் பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன் என்பவரின் மகன் பிரதீப் என்பவர் நண்பர் ஆவார். 

இந்நிலையில், பிரதீப் முருகனிடம் தனக்குத் தெரிந்த இ.எஸ்.ஐ மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் அரசு மருத்துவர் தன்யா என்பவர் பல ஆண்டுகால அனுபவம் உள்ளவர் என்றும், மத்திய மாநில அரசு அலுவலகங்களில் பணம் கொடுத்தால் வேலை வாங்கிக் கொடுப்பதாகவும் கூறியுள்ளார். 

இதையடுத்து, முருகனும் பிரதீப்பும் சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தன்யாவின் வீட்டிற்கு சென்று பேசினர். 



முருகனுக்கும், அவரது தம்பி வெள்ளை பாண்டிக்கும் கோவை சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக தன்யா உறுதி அளித்துள்ளார். இதற்காக 15 லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார். 



இதனைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் கடந்த மாதம் வரை நேரிலும், வங்கி பரிவர்த்தனை மூலமும் மூன்று தவணைகளாக 15 லட்ச ரூபாயை முருகன் தன்யாவுக்கு கொடுத்துள்ளார். பின்னர் முருகன் தன்யாவை சந்தித்து எப்போது வேலை கிடைக்கும் என பலமுறை கேட்டு வந்தார். ஆனால் அவர் சரியான பதில் அளிக்காமல் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி வந்துள்ளார். 

இதனையடுத்து, விசாரித்தபோது தன்யா இஎஸ்ஐ மருத்துவமனையில் வேலை செய்யவில்லை என்பது தெரியவந்தது. இது குறித்து அவர்களிடம் கேட்கும் போது தன்யா தனக்கு கோவை காவல் கண்காணிப்பாளர், கோவை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நன்கு பழக்கமானவர்கள் எனவும், யாரிடம் புகார் தெரிவித்தாலும் தங்களை ஒன்றும் செய்ய முடியாது எனவும் கூறி மிரட்டியுள்ளார். 

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முருகன் இதுகுறித்து சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், இதே போல் பலரிடம் சுமார் 40 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்துள்ளதாகவும் முருகன் தெரிவித்தார். 

புகாரின் பேரில், போலீசார் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த தன்யா மற்றும் பிரதீப் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதேபோல, வேறு யாரிடமாவது மோசடியில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள தன்யா, பிரதீப் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...