கோவை கிணத்துக்கடவு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சலவைத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..!

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கிணத்துக்கடவு போலீசார் அடையாளம் தெரியாத வாகனத்தைத் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே கோவில்பாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சலவைத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

கிணத்துக்கடவு அருகே உள்ள எஸ்.மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (85) சலவைத் தொழிலாளர் இவர், மனைவி, மகன் மற்றும் மகள்களுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று இரவு எஸ்.மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து கோவில்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த வந்துள்ளார்.

பின்னர், மது அருந்திவிட்டு பொள்ளாச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று ராமசாமி மீது மோதியதில், பலத்த காயம் ஏற்பட்ட ராமசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து, கிணத்துக்கடவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...