கோவை ஆர்.எஸ்.புரம் அருகே ஓலா எலக்ட்ரிக் பைக் டீலர்ஷிப் தருவதாகக் கூறி கோவை வியாபாரியிடம் ரூ. 4.69 லட்சம் மோசடி..!

புகாரின் பேரில், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் ஓலா எலக்ட்ரிக் பைக் டீலர்ஷிப் தருவதாகக் கூறி, கோவை வியாபாரியிடம் 4.69 லட்சம் ரூபாய் பறித்த மர்ம நபரை, சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை ஆர்.எஸ்.புரம் சிரியன் சர்ச் ரோட்டில் வசிப்பவர் கிஷன் கனேரியா (26). இவர் ஹார்டுவேர் வியாபாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில், இவரை போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஓலா எலக்ட்ரிக் நிறுவன அதிகாரியைப் போல பேசினார். தங்கள் நிறுவனம் குறிப்பிடும் தொகையை செலுத்தினால், ஓலா எலக்ட்ரிக் பைக் நிறுவனத்தின் டீலர்ஷிப் தருவதாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, பெட்ரோல் விலை உயர்வால், எதிர்காலத்தில் எலக்ட்ரிக் பைக்குகளே அதிகமாக விற்கும் என்றும், டீலர்ஷிப் எடுத்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.

அவர் பேசியதை அப்படியே நம்பிய கிஷன் கனேரியா, குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் 4 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் செலுத்தினார். கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் இந்த மோசடி நடந்துள்ளது. ஆனால் குறிப்பிட்டபடி டீலர்ஷிப் எதுவும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து, ஓலா நிறுவனத்தில் விசாரித்தபோது, தங்கள் நிறுவனத்தில் இருந்து டீலர்ஷிப் யாருக்கும் வழங்குவதில்லை என்றும், யாரிடமும் அதற்காக முன்பணம் வாங்கவில்லை என்றும் தெரிவித்தனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த கிஷன் கனேரியா, கோவை மாநகர போலீசில் புகார் தெரிவித்தார். சைபர் கிரைம் எஸ்.ஐ., கருப்புசாமி வழக்குப் பதிந்ததையடுத்து ஆய்வாளர் தண்டபாணி, பண மோசடி செய்தவரை தேடி வருகிறார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...