கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்கு புதிய சுகாதார அலுவலராக பரமசிவம் நியமனம்..!

சீனியாரிட்டி அடிப்படையில் சுகாதார ஆய்வாளர் பரமசிவத்துக்கு, பதவி உயர்வு வழங்கி மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்கு புதிய சுகாதார அலுவலராக பரமசிவம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாநகராட்சியில் ஐந்து மண்டலங்கள் உள்ளன. அந்தந்த மண்டலத்துக்கு உட்பட்ட, 20 வார்டுகளை கவனிக்கும் வகையில், மண்டல சுகாதார அலுவலர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

மேற்கு மண்டலத்தில் பணிபுரிந்த சுகாதார அலுவலர் சண்முகநாதன், பிப்ரவரி 28ல் பணி ஓய்வு பெற்றார். அவரது பதவிக்கு வர, சுகாதார ஆய்வாளர்கள் பலரும் பல வழிகளில் முயன்றனர். ஆளுங்கட்சியினர் மூலமாக அழுத்தம் கொடுத்துப் பார்த்தனர்.

இந்நிலையில், எதற்கும் அசைந்து கொடுக்காத மாநகராட்சி ஆணையர் ராஜகோபால், சீனியாரிட்டி அடிப்படையில் காத்திருந்த சுகாதார ஆய்வாளர் பரமசிவத்துக்கு, பதவி உயர்வு வழங்கி மேற்கு மண்டல சுகாதார அலுவலர் பொறுப்பு வழங்கி உத்தரவிட்டிருக்கிறார்.

மேலும், வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில், குப்பை அள்ளும் பணி சுணக்கமாக இருந்தது. மதியம், 12.00 மணிக்குச் சென்றாலும் வார்டுகளில் பல்வேறு பகுதிகளில் குப்பை தேக்கம் காணப்பட்டது.

அதனால், சுகாதார அலுவலர் ராமச்சந்திரனை, அப்பொறுப்பில் இருந்து விடுவித்து விட்டு, சுகாதார ஆய்வாளர் ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி ஆணையர் உத்தரவிட்டிருக்கிறார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...