கோவையில் ரூ.1.10 கோடி கேட்டு தனியார் ஆசிரம உரிமையாளர் கடத்தல் - மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு..!

ரூ. 35 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஆசிரம உரிமையாளரை விடுவித்த நிலையில், புகாரின் பேரில் பேரூர் போலீசார் மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் தனியார் ஆசிரம உரிமையாளரை ரூ.1.10 கோடி கேட்டு, கடத்தி மிரட்டல் விடுத்து, ரூ.35 லட்சம் பணத்தை பெற்று தப்பிய மர்ம கும்பலை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

கோவை பேரூர் தீத்திபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் ஈரோடு மாவட்டத்தில் புலிப்பாணி சித்தர் மடம் வைத்து நடத்தி வருகிறார். வாரத்துக்கு இரண்டு நாள் மட்டுமே கோவை வரும் அவர் கடந்த 7ம் தேதி வழக்கம்போல் தனது வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்நிலையில், 8ம் தேதி காலை நடைப்பயிற்சி மேற்கொண்டதாக தெரிகிறது. அப்போது வேனில் வந்த மர்ம நபர்கள் தாங்களை பேரூர் போலீசார் என்றும், விசாரணைக்கு அழைத்துச் செல்ல வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த சரவணன் அவர்களிடம் அடையாள அட்டை கேட்டுள்ளார்.

ஆனால், அவர்கள் சரவணனை வேனுக்குள் இழுத்துப்போட்டு கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் அவரை வேனில் கடத்திக் கொண்டு பழனியில் உள்ள தனியார் விடுதியில் அடைத்து வைத்துள்ளனர். துப்பாக்கி, கத்தி ஆகியவற்றை வைத்து மிரட்டி அவரது மனைவியிடம் ரூ.1.10 கோடி கேட்டு மிரட்டியுள்ளனர்.

மேலும், பணத்தை கொடுக்கவில்லை என்றால் சரவணனை கொலை செய்து உடலை மட்டும் அனுப்பி வைப்போம் என மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி ரூ.35 லட்சம் பணத்தை தயார் செய்துள்ளார்.

இதையடுத்து, பணத்தை சேலம் மாவட்டம் திருச்செங்கோடு மணல்மேட்டில் வைத்து பணத்தைப் பெற்ற மர்ம கும்பல், அதன் பிறகு பழனியில் இருந்த சரவணனை விடுவித்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக சரவணன் கோவை பேரூர் போலீசில் புகார் அளித்துள்ளார். புகார் அடிப்படையில் அவரை கடத்திச் சென்ற மர்ம கும்பலை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

மேலும், அவரது மடத்திலோ, நிறுவனத்திலோ வேலை செய்வோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...