மாநில அளவில் முதலிடம் பிடித்த கோவை மாவட்ட காவல்துறையினை பாராட்டி, முதல்வர் வழங்கிய பரிசு கேடையத்தை, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், செல்வ நாகரத்தினம் பெற்றுக் கொண்டார்.
கோவை: மாநில அளவில் முதலிடம் பிடித்த கோவை மாவட்ட காவல்துறையைப் பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினத்திற்கு தமிழக முதலமைச்சர் பரிசு கேடயத்தினை வழங்கினார்.
தமிழக முதலமைச்சர் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அனைத்து காவல் உயர் அதிகாரிகளுக்கு அலுவலக செயல்பாடுகள் குறித்த மாநாடு இன்று, 10.03.2022 முதல் மூன்று நாட்கள் சென்னையில் நடைபெற்று வருகிறது.
இம்மாநாட்டில் இ-அலுவலக மேலாண்மையில், அலுவலக கோப்புகளைச் சிறப்பாகக் கையாண்டு, கடந்த பிப்ரவரி-2022 இல் மாநில அளவில் முதலிடம் பிடித்த கோவை மாவட்ட காவல்துறையினை பாராட்டி அதற்கான பரிசு கேடயத்தை தமிழக முதலமைச்சர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினத்திற்கு வழங்கினார்.