முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு திரையரங்குக்கு 4 போலீசார் விதம் மாநகர் மற்றும் புறநகரில் படம் திரையிடப்பட்ட 23 திரையரங்குகள் முன்பு மொத்தம் 92 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை: நடிகர் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் இன்று திரையரங்குகளில் திரையிடப்பட்டது. ஜெய் பீம் படம் சர்ச்சையைத் தொடர்ந்து சூர்யா படத்தை திரையரங்குகளில் வெளியிட சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடலூரில் எதற்கும் துணிந்தவன் படத்தை திரையரங்குகளில் வெளியிடக் கூடாது என மிரட்டல் கடிதம் வந்தது. இதையடுத்து படம் இன்று வெளியானதால் சென்னையில் உள்ள நடிகர் சூர்யா வீட்டிற்கும் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதேபோல் சூர்யா படம் வெளியாகும் திரையரங்குகளின் முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை மாவட்டம் முழுவதும் மொத்தம் 23 தியேட்டர்களில் எதற்கும் துணிந்தவன் படம் வெளியாகி உள்ளது.
மாநகரில் 12 திரையரங்குகளில் புறநகரில் 11 இடங்களிலும் படம் திரையிடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு திரையரங்குக்கு 4 போலீசார் விதம் மாநகர் மற்றும் புறநகரில் படம் திரையிடப்பட்ட 23 திரையரங்குகள் முன்பு மொத்தம் 92 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.