கோவையில் உலக சிறுநீரக தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி

உலக சிறுநீரக தினத்தையொட்டி கோவை அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை டீன் நிர்மலா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


கோவை: உலக சிறுநீரக தினத்தையொட்டி சிறுநீரக பாதுகாப்பை வலியுறுத்தி, கோவை அரசு மருத்துவமனையில் நடைப்பெற்ற விழிப்புணர்வு பேரணியை டீன் நிர்மலா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



கோவை மருத்துவக்‌ கல்லூரியில் முதல்வர்‌ காப்பீட்டுத் திட்டத்தின்‌ கீழ்‌ இலவசமாகச் செய்யப்படும் சிகிச்சைகளின் விபரம்:-

சிறுநீரக நோய்‌ பெரும்பாலானவர்களுக்கு எந்தவிதமான அறிகுறியும் இல்லாமல் ஏற்படுகிறது. இவ்வகை நோய்களைத் தற்காலிக சிறுநீரக பாதிப்பு மற்றும்‌ நிரந்த சிறுநீரக பாதிப்பு என்று இரண்டு வகைப்படுத்தலாம்‌.

தற்காலிக சிறுநீரக பாதிப்பு பாம்பு கடி, நோய்‌ தொற்று (septicemia), மருத்துவரின்‌ அனுமதி இன்றி எடுத்துக்கொள்ளப்படும்‌ வலி நிவாரண மாத்திரைகள்‌, எலிக் காய்ச்சல்‌, டெங்குகாய்ச்சல்‌, வாந்தி வயிற்றுப்போக்கு காரணமாக ஏற்படுகிறது.

நிரந்தர சிறுநீரக பாதிப்பு நீண்ட நாள்‌ சர்க்கரை வியாதி, நீண்டநாள்‌ அதிக ரத்த அழுத்த வியாதி, சில பரம்பரையான வியாதிகள்‌, சிறுநீரகத்தைத் தாக்கும்‌.

சில வகையான Glomerulo nephritis, நீண்டநாள்‌ வலி நிவாரண மருந்துகள்‌ ஆகியவற்றின்‌ காரணமாக ஏற்படுகிறது, இவ்வகையான வியாதிகள்‌ பெரும்பாலானோருக்கு எத்தவிதமான நோய்‌ அறிகுறியும்‌ ஏற்படுவதில்லை. 80% செயல்‌ இழப்பு ஏற்பட்ட பின்னரே நோய்க்கான அறிகுறிகள்‌ தென்பட ஆரம்பிக்கும்‌.

கை கால்‌ வீக்கம்‌ இரவில்‌ அதிக சிறுநீர்‌ வெளியேறுதல்‌, ரத்த அழுத்தம்‌, பசியின்மை உடல்‌ சோர்வு வாந்தி மயக்கம்‌ மூச்சு வாங்குதல்‌ போன்ற தொந்தரவுகள்‌ ஏற்படலாம்‌. நோயின்‌ தீவிரம்‌ அதிகரிக்கும்‌ பொழுது நினைவு பாதிப்பு வலிப்பு‌ போன்ற பாதிப்புகள்‌ ஏற்படலாம்‌.

சிறுநீரகம்‌ 85 முதல்‌ 90 சதவீதம்‌ பாதிப்பு ஏற்படும்‌ வரை நோய்‌ மருந்து மாத்திரைகள்‌ மூலம்‌ தீவிரத்தைக் குறைக்க இயலும்‌. இவர்களுக்குச் சர்க்கரை மற்றும்‌ ரத்த அழுத்தத்தை முழு கட்டுப்பாட்டில்‌ வைத்திருத்தல்‌ மிகவும்‌ அவசியம்‌.

உட்‌ கொள்ளக்‌ கூடிய நீரின்‌ அளவு மற்றும்‌ உப்பின்‌ அளவை மருத்துவரின்‌ அனுமதியுடன்‌ தேவையான அளவு குறைத்துக்‌ கொள்ள வேண்டும்‌. உணவுக்கட்டுப்பாடு மிகவும்‌ அவசியம்‌. இவர்களுக்கு ரத்த சோகை, மிக மோசமான நிலையில்‌ இருக்கும்‌. ரத்தசோகையைக் கட்டுப்படுத்த சிறப்பு மருந்துகள்‌ மிகவும்‌ அவசியம்‌.

இவர்களின்‌ எலும்புகள்‌ வலுவிழந்து காணப்படும்‌. அதைச் சரி செய்யத் தேவையான மருந்து மாத்திரைகள்‌ உட்கொள்ள வேண்டும்‌. நோயின்‌ தீவிரம்‌ மிகவும்‌ அதிகமான நிலையில்‌ இவர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அல்லது டயாலிசிஸ்‌ சிகிச்சை தேவைப்படும்‌.

டயாலிசிஸ்‌ சிகிச்சை முதலில்‌ கழுத்தில்‌ Catheter செலுத்தி அதன் வழியாக பின்‌ கையில்‌ இரண்டு இரத்தக்‌ குழாய்களை‌ இணைத்து அந்த ரத்தக்‌ குழாய்கள்‌ முதிர்ச்சி அடைந்த பின்‌ அதன்‌ வழியாகச் செய்யப்படும்‌. தற்பொழுது வயிற்றில்‌ Catheter செலுத்தி அதன்‌ வழியாக Continuous ambulatory Peritoneal dialysis என்ற சிகிச்சையும்‌ செய்யப்படுகிறது.

நிரந்தர செயலிழப்பு உள்ள சிறுநீரக நோயாளிகளுக்கு வாழ்நாள்‌ முழுவதும்‌ டயாலிசிஸ்‌ சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. சிறுநீரக தானம்‌ செய்ய விருப்பம்‌ உள்ளோருக்குப் பரிசோதனைகள்‌ செய்யப்பட்டு அவர்களுக்குச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

மேற்கூறிய அனைத்து சிகிச்சைகளும்‌ முதல்வர்‌ காப்பீட்டுத் திட்டத்தின்‌ கீழ்‌ இலவசமாகச் செய்யப்படுகிறது.

கோவை மருத்துவக்‌ கல்லூரி சுமார்‌ 1100 Session Hemodialysis சிகிச்சை மாதம்‌ செய்யப்படுகிறது. கழுத்தில்‌ Catheter செலுத்தி மாதம்‌ 75 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுவரை சுமார்‌ 28 நோயாளிகளுக்குச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...