கோவையில் 'ரவுடி பேபி' சூர்யா ஆதரவாளர்கள் மிரட்டல் விடுவதாக யூடியூபர்ஸ் புகார்

டிக்டாக் மூலம் பிரபலமான ரவுடி பேபி சூர்யாவின் ஆதரவாளர்கள் தொலைப்பேசி மூலமாகவும் யூடியூப் மூலமாகவும், தங்களை மிரட்டுவதாக பல்வேறு யூடியூபர்ஸ் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.


கோவை: டிக்டாக் மூலம் பிரபலமான ரவுடி பேபி சூர்யா ஆதரவாளர்கள் தங்களை மிரட்டுவதாக பல்வேறு யூடியூபர்ஸ் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

டிக்டாக் மூலம் பிரபலமான ரவுடி பேபி சூர்யா(எ) சுப்புலட்சுமி மற்றும் அவரது நண்பர் சிக்கா ஆகிய இருவரும் ஆபாசமாக வலைத்தளங்களில் பதிவிடுவதாகவும் தங்களையும் மிரட்டுவதாகவும் கோவையைச் சேர்ந்த தம்பதியினர் அளித்த புகாரின் பேரிலும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொடுக்கப்பட்ட புகார்களின் பேரிலும் சில தினங்களுக்கு முன் சூர்யா மற்றும் சிக்கா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவர் மீதும் தற்போது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரவுடி பேபி சூர்யாவின் ஆதரவாளர்கள் தங்களை மிரட்டுவதாகக் கூறி ரவுடி பேபி சூர்யா மீது புகார் அளித்தவர்களும் அவர்களது ஆதரவாளர்களும் புகார் தெரிவித்துள்ளனர்.



கோவை மாவட்டத்தைச் சேர்ந்த திலகா தம்பதியினர் முதலில் புகார் அளித்த நிலையில், அவர்களுக்கு ஆதரவாக லாரன்ஸ் சூர்யா- (மாற்றுத் திறனாளி- யூடியூபர்), உட்பட சிலர் ஆதரவு தெரிவித்திருந்துள்ளனர்.



இந்நிலையில் சூர்யாவின் ஆதரவாளர்கள் தங்களைத் தொலைப்பேசி மூலமாகவும் யூடியூப் மூலமாகவும் கொலை மிரட்டல் விடுவதாகவும் தங்களைப் பற்றி அவர்களது சேனல்களில் தரக்குறைவாகப் பதிவிடுவதாகவும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு மட்டுமல்லாமல் மலேசியா ஆகிய இடங்களில் இருப்பவர்கள் சிலரும் அவர்களது யூடியூர் சேனல்களில் தங்களை பற்றி இழிவாகவும் தவறுதகாவும் பதிவிடுவதாகத் தெரிவித்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...